ஞாயிறு கொண்டாட்டம்

திரைக்கதிர்

'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முழுப் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக 35 நாள்களில் சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முழுப் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக 35 நாள்களில் சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகும் இப்படத்தை 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் கதை, திரைக்கதை எழுதி இயக்கு

கிறார். அபிஷன் ஜீவிந்த்துக்கு ஜோடியாக மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59-ஆவது தயாரிப்பாக உருவாகி வருகிறது. ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தை முன்னணித் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். 'ராஜா வாரு ராணி காரு' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்தப் படத்தை இயக்குகிறார்.

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். திருமணத்துக்குப் பின் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இது.

'காட்டாளன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸின் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகை பிடிக்கும் சிகார் இப்படியாக ஆண்டனியின் லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாகக் காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.

பால் ஜார்ஜ் இயக்கத்தில் பான் இந்தியா படமாக இது உருவாகவுள்ளது. புகழ் பெற்ற யானை பொங் இதில் நடிக்கிறது.

'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் திரைக்கதையில் உருவாகி வரும் படம் 'சிறை'. உண்மையில் தான் சந்தித்த அனுபவத்தை வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளார் தமிழ். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.

ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். விக்ரம் பிரபு, அனந்தா, அக்ஷய் குமார், அனிஷ்மா நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று இப்படம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து!

ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

மத்திய சிறைகளில் ஆம் ஆத்மி மருத்துவமனை: பஞ்சாப் அரசு!

திருமலை ஏழுமலையான் கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம்!

174 ஆண்டுகளில் உலகம் பார்த்திடாத புயல்! ஜமைக்கா கடலில் சுழன்றுகொண்டே நகரும் மெலிஸா!!

SCROLL FOR NEXT