ஞாயிறு கொண்டாட்டம்

எழுத... எழுத...

நவீன யுகத்தில் பள்ளிகளில் மழலை வகுப்புகளில்கூட கணினிகளும், 'கீ போர்ட்'டுகளும் வந்துவிட்டன.

நாகராஜன்

நவீன யுகத்தில் பள்ளிகளில் மழலை வகுப்புகளில்கூட கணினிகளும், 'கீ போர்ட்'டுகளும் வந்துவிட்டன. கையால் எழுதுவது இருந்தது என்பதையே ஒருவேளை வருங்காலக் குழந்தைகள் அறிய மாட்டார்கள்.

கையால் எழுதும் பழக்கம் குறித்து 'ஃப்ரான்டியர்ஸ் இன் சைக்காலஜி' என்ற உளவியல் பத்திரிகை வெளியிட்ட ஆய்வில், 'தட்டச்சு செய்வது எளிது. மிக வேகமாக நினைத்ததைச் சொல்லவல்லது. கையால் எழுதும் பழக்கத்தால் மூளையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன' என தெரிவிக்கப்பட்டது.

நார்வேஜியன் யுனிவர்ஸிடி ஆஃப் ஸயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் உள்ள மூளையியல் ஆய்வகம், 'பிறக்கும் குழந்தைகள் முதல் நாளில் இருந்தே கற்பதில் ஆர்வம் காட்டுகின்றன' என்பதை நிரூபித்தது.

பிரபல உளவியல் நிபுணர் ஆட்ரி வான் டெர் மீர் பலரை நன்கு சோதனை செய்து, 36 பேரைத் தேர்ந்தெடுத்தார். சோதனைக்கு உள்பட்டோர் இரண்டு வேலைகளைச் செய்து முடித்தனர். ஒன்று டிஜிட்டல் பேனாவைக் கையில் பிடித்து எழுதுவது. இன்னொன்று அதே வார்த்தைகளைத் தட்டச்சு செய்வது.

ஒவ்வொரு வார்த்தையையும் 25 விநாடிகளுக்குள் அவர்கள் இதைச் செய்து முடித்தனர். மூளை அதை சரியாகப் பதிவு செய்வதற்காக! 'ஹை டென்ஸிடி இஇஜி'யினால் அவர்களது மின்னாற்றல் செயல் திறன் அளக்கப்பட்டது. மண்டையில் பொருத்தப்பட்ட சென்சார்களால் அவர்களது மூளை செயல்பாடுகள் துல்லியமாக அளக்கப்பட்டன.

தட்டச்சு செய்வதைவிட கையால் எழுதும்போது, தீடா, ஆல்ஃபா ஃப்ரீக்வென்ஸி பேண்டுகளில் அதிகமாக மூளை வேலை செய்வதை முடிவுகள் சுட்டிக்காட்டின. கையால் எழுதும்போது, உடல் செயல்பாட்டுடன் நுட்பமான மூளை ஆற்றல் பெரிய அளவில் ஈடுபடுகிறது என்பதே ஆய்வின் முடிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் மனிதாபிமானமற்ற முகம்: பெண் மருத்துவர் தற்கொலை விவகாரத்தில் ராகுல் கருத்து

உன்னைத் தழுவ அலைபாயும் காற்று... ஷ்ரத்தா தாஸ்!

சமூக நீதி பேசுபவர்கள் சமூக நல விடுதிகளை மூடுவது நியாயமா?: வானதி சீனிவாசன் கேள்வி

ஆண்டுதோறும் சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை!

‘மோந்தா’ புயல்: சென்னையில் கனமழை எப்போது தொடங்கும்? தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT