ஞாயிறு கொண்டாட்டம்

மோடி வாழ்க்கைப் படம்

பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாள் கடந்த 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாள் கடந்த 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது வாழ்க்கை படமாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கை 'மா வந்தே' என்ற பெயரில் சினிமாவாகிறது.

சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மோடியாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். பான்}இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது. ஒரு தாயின் துணிவு பல போர்களை வெல்லும் என்ற சப் டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தை கிராசாந்திகுமார் இயக்க, கே.ஜி.எப். இசையமைப்பாளர் ரவிபஸ்ரூர் இசையமைக்கிறார்.

பிரதமர் வேடத்தில் நடிக்கும் உன்னிமுகுந்தன் தமிழில் சீடன், கருடன் படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த மாளிகாபுரம் என்ற சபரிமலை பின்னணியிலான படம் பெரிய ஹிட் ஆனது. ' நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற பிரதமர் நரேந்திர மோடியின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தை இப்படம் சித்தரிக்கிறது.

சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு மோடியின் பிறந்த நாளில் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"காங்கிரஸின் நிலை தான் தவெகவிற்கும்!” SIR எதிர்ப்பு பற்றி அண்ணாமலை! | TVK | BJP

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்! | Flash Flood | Shorts

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயதான தாயும் மகனும் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஐபிஎல் மினி ஏலம்- எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை?

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாஜக பிரமுகருக்கு சாகும் வரை ஆயுள் சிறை!

SCROLL FOR NEXT