ஞாயிறு கொண்டாட்டம்

திரைக் கதிர்

'கும்கி' படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியை தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் 'கும்கி 2' உருவாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

'கும்கி' படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியை தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் 'கும்கி 2' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார்.

ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் மையக்கரு என படக்குழு தெரிவித்துள்ளது. இயற்கை, மனிதன், மற்றும் யானைகளின் உறவுகளை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரபு சாலமன். அர்ஜுன்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா.

அதில் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன்... இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இரண்டாவது முறையாக அனுப்பியுள்ளார்.

நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள மதுரை வந்த பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.

செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை ரொம்ப பிடிக்கும். 'க/பெ ரணசிங்கம்', 'பண்ணையாரும் பத்மினியும்' உள்ளிட்ட படங்களில் சூட்டிங்கிற்காக அடிக்கடி மதுரை வந்திருக்கிறேன். மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த கடவுள்.

மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும். நான் தீவிரமான நான்வெஜிடரியன்' என்றவரிடம், 'விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'இல்லை' என்றார்.

நடிகர் சித்தார்த், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் வெப் தொடரில் நடிக்கிறார். இதில், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் 'ஸ்லம்டாக் மில்லியனர்' ஃபிரீடா பிண்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹிரியின் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமான்டிக் கதை, கலாசார ரீதியிலான தொடராகவும் அமையும்.

இந்திய-அமெரிக்கச் சமூகத்துக்குள் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் காதல், ஆசை, அடையாளம், கலாசாரம் மற்றும் உறவுகளிடையேயான எதிர்பார்ப்புகளைச் சொல்கிறது.

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 - ஆ ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாள்களுக்குள் ஓடி வசூல் சாதனை படைத்த ' கிஸ்' படம் தமிழில் ' கிஸ் மீ இடியட்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இயக்குநராக ஜெய்சங்கர் ராமலிங்கம் பணியாற்ற பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார். பாடல்களை மணிமாறன் எழுதுகிறார் இணை இயக்குநர்களாக எலிசபெத் மற்றும் நாகன் பிள்ளை பணியாற்றி உள்ளனர். கன்னடத்தில் இந்தப் படத்தை இயக்கிய அர்ஜுன் தமிழிலும் இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

SCROLL FOR NEXT