ஞாயிறு கொண்டாட்டம்

சுதாவுக்கு மணிரத்னம் பாராட்டு

சிவகார்த்திகேயனின் 25-ஆவது திரைப்படம் 'பராசக்தி'. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார்.

தினமணி செய்திச் சேவை

சிவகார்த்திகேயனின் 25-ஆவது திரைப்படம் 'பராசக்தி'. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மணிரத்னம், 'சுதா என்கிட்ட 'ஆயுத எழுத்து', 'யுவா' என இரண்டு படங்களிலும் வேலை செஞ்சாங்க.

அந்தப் படங்கள்ல அவங்க கன்டினியூட்டி இன்சார்ஜ். எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க. ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.

ஷூட்டிங் முடிஞ்சு வெளியே போனால் கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும். கன்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது.

அப்போவே அப்படின்னா, இப்போ சொல்லவே வேண்டாம். அவருக்கு என் பாராட்டுகள்' என்றார். 'சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார்' என்று அவர் சொன்னதும், சிவகார்த்திகேயன் எழுந்து நின்று வணங்கினார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT