முகப்பு
தமிழ்மணி

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: ஆழ்கடல் செல்வங்களும், நாட்டின் பாதுகாப்பும்

பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில், ""வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்...'' தீபகற்ப இந்தியாவில், ""மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவ

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:44 PM
பகிர்:

பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில்,

""வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி

மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்...''

தீபகற்ப இந்தியாவில், ""மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்'' என, "மேலைக் கடலை மட்டும் பாரதி குறிப்பிட்டுப் பாடிய காரணம் என்ன?

பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அதனால், "அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா எப்படி இருந்தது? அதற்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது? அவர் காலத்துக்குப் பின்னர் அது எப்படி இருக்கும்?' என்ற முக்காலச் செய்தியையும், தாம் பாடிய "பாரத தேசம்' என்னும் பாடலில் கூறியுள்ளார்.

÷

""வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி

மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்...''

என்னும் அடிகளில், ""மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்'' என்று மட்டும் கூறியிருந்தால், "மேலை' என்பதற்கு மேற்குத் திசை எனப் பொருள் கொண்டு (தீபகற்ப இந்தியாவின் மேற்குத் திசை), தீபகற்ப இந்தியாவின் மேற்குத் திசையிலுள்ள மேற்குக் கடல், அதாவது, அரபிக்கடல் மீது கப்பல் ஓட்டுவோம் எனக் கொள்ளலாம். ஆனால், மேலைக் கடல் என்று சொல்லாது, "அடி' என்னும் ஒரு சொல்லைப் பெய்து, "அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்' எனப் பாடியிருப்பதால், "அடிக்கடல், மேலைக்கடல்' என்று கொண்டு கூட்டி, கடலின் மேலும், கடலின் கீழும் கப்பல் விடுவோம் என்று பொருள் கொள்ளத்தக்கது சிறப்புடையதாகும். அவ்வாறு பொருள் கொண்டால், கடல் நீரின் மேலேயும் அல்லாமல், கடல் நீருக்குள்ளேயும் கப்பல் ஓட்டுவோம் என்பது தெளிவாகிறதல்லவா?

÷ஒரு சமயம், இது குறித்து மூதறிஞர், முனைவர் முத்து கண்ணப்பரோடு உரையாடிபோது, அன்னார் இதைத் தெரிவித்தார். காந்திய சிந்தனையாளரான அவருக்கு இத்தகைய சிந்தனை ஏற்பட்டிருப்பது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா!

÷ஆகவே இந்தியா, நீர் மூழ்கிக் கப்பலைக்

(நன்க்ஷம்ஹழ்ண்ய்ங்) கட்டி, ஆழ்கடலில் அமிழ்ந்து கிடக்கும் அரிய செல்வங்களை மேலே கொண்டு வரத் துணை புரிவதோடு, கடல் வழி நாட்டின் பாதுகாப்புக்கும் அடிகோலும் என்னும் உண்மையைத் தான் "அடி' என்ற சொல்லைக் கொண்டு புலப்படுத்தியுள்ளார் என்பது விளங்குகிறதல்லவா!

முழு கட்டுரையைப் படிக்க →