மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: நடுவுவாங்கி இட்டெழுதுதல்
ஆய்தம் என்பது புதியன புகுதல் விதிப்படி பிற்கால வழக்கு. கவிஞர் ஒருவர் ""தமிழை எவரும் அழிக்க முடியாது. ஏனெனில் அதில் ஆய்தம் உள்ளது'' என்றே பாடிவிட்டார். தொல்காப்பியர் "ஆய்தம்' என்றே கூறுகிறார். தொல்காப்
ஆய்தம் என்பது புதியன புகுதல் விதிப்படி பிற்கால வழக்கு. கவிஞர் ஒருவர் ""தமிழை எவரும் அழிக்க முடியாது. ஏனெனில் அதில் ஆய்தம் உள்ளது'' என்றே பாடிவிட்டார். தொல்காப்பியர் "ஆய்தம்' என்றே கூறுகிறார். தொல்காப்பியமும், நன்னூலும் ஆய்தத்தைச் சார்பெழுத்து என்று கூற, நேமிநாதமும், வீரசோழியமும் முதல் எழுத்து என்றே கூறும்.
திருக்குறளில் 49 இடங்களில் ஆய்தம் வருகிறது. 43 இடங்களில் மெய்போல அலகு பெறாமலும், 6 இடங்களில் அலகு பெற்றும் வருகிறது. "ஒü' என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய மெய்போல ஆய்தம் உயிர் ஏற இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும் வராது. எனவே ஆய்தத்தைத் "தனிநிலை' என்பர்.
ஆய்தம் பல திரிபுகளைப் பெற்றது. தொல்காப்பியம் பஃது, அஃது, இஃது என்று கூறுவது (முப்)பது, அது இது என மாறிவிட்டது. இஃதை என்பது இத்தை என்றும், "இஃதெழுதிய' என்பது "இய்தெழுதிய' என்றும் மாறியது. சங்ககால மன்னர், மன்னர் மகள் இருவரும் அஃதை என்று புலவர் ஒருவர் கூற மற்றொரு புலவர் "அகுதை' எனக்குறிப்பார். குறிலுக்குப் பின்னர் உகரம் ஏறிய வல்லினத்துக்கு முன்பு ஆய்தம் வரும் என்று கூறப்பட்டாலும் புணர்ச்சியில் கல்+தீது = கஃறீது எனக் கூறப்பட்டாலும் "கற்றீது' என மாறியது.
"ஆய்தம்' என்ற முப்பாற்புள்ளி என்று தொல்காப்பியர் கூறினாலும், பழந்தமிழில் (தமிழ்பிராமி என்பது தவறு) இ என்ற எழுத்து என்று எழுதப்பட்டது. இலக்கண ஆசிரியர்கள் ஆய்தத்தை ஒரு புள்ளி . இருபுள்ளி : மூன்று புள்ளி ஃ என்று பலவாறு கூறுவர். நச்சினார்க்கினியர் ஆய்தத்தை "நடுவுவாங்கியிட்டு எழுதுப' என்கிறார். அவர் கூறும் வடிவம்தான் இரண்டாம் நந்திவர்மன் காசாக்குடிச் செப்பேட்டில் வெஃகா என்பது
வெ கா என எழுதப்பட்டுள்ளது. வரகுணபாண்டியனின் திருச்செந்தூர் கல்வெட்டில் என்றும் காணும் வண்ணம் முதல் முறையாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!
தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி' வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா?
-கே.என்.பாலகிருஷ்ணன், சென்னை.