தமிழ்மணி

அரசுக்கு அருகில் வேம்பு...

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைக்களப் புலவராகப் புகழ் பெற்று விளங்கிய சிலேடைப்புலி "வேம்பு' ஐயர் மன்னரைக் காண அவைக்கு வந்தார்.

கு.பாலசுப்ரமணியன்

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைக்களப் புலவராகப் புகழ் பெற்று விளங்கிய சிலேடைப்புலி "வேம்பு' ஐயர் மன்னரைக் காண அவைக்கு வந்தார். அப்போது, மன்னருக்கு முன்பு இருந்த இருக்கைகளில் புலவர்களும் மற்றையோரும் அமர்ந்திருந்தனர். அமர்வதற்கு இருக்கை ஏதும் இல்லாத நிலையில், புலவர் சிலேடைப் புலி சில விநாடிகள் நிற்க நேரிட்டது. வேம்பு ஐயர் நிற்பதைக் கண்ட புலவர் ஒருவர் அவரைப் பார்த்து ""வேம்பு நிற்கத்தானே செய்யும், அது அமர்வது இல்லையே'' என்ற பொருளில், ""வேம்பு நிற்பதுதானே முறை'' எனக் கிண்டலாகக் கூறினார்.

உடனே மன்னர் தனது அருகில் இருக்கை ஒன்றைக் கொண்டுவரப் பணித்து, அதில் வேம்பு ஐயரை அமரச் செய்தார். தன்னிடம் "நிற்பதுதானே முறை' எனக் கிண்டலாகக் கூறிய புலவரிடம், ""வேம்பு அரசுக்கு அருகில் இருக்கும்'' என்று பதில் மொழி நவின்றார். கோயில்களில் அரசமரம் அருகில் வேம்பு (வேப்ப) மரத்தையும் வைப்பர் என்பதையும் அரசும் வேம்பும் ஒன்றாகவே இருக்கும் என்பதையும் அப்புலவருக்கு உணர்த்தி, "அரசன் இருக்கும் இடத்தல் வேம்பு (ஐயர்) இருப்பார்' என்பதைச் சிலேடையில் உணர்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT