தமிழ்மணி

சொல் புதிது - 23

திரைகடல் ஓடித் திரவியம் தேடு' என்றார்கள். இப்போது வீட்டில் இருந்துகொண்டே பணம் சம்பாதிக்கலாம் என்றும், உங்களை நீங்கள் சந்தைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் இணைய தளங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள்.

முனைவர் ம. இராசேந்திரன்

திரைகடல் ஓடித் திரவியம் தேடு' என்றார்கள். இப்போது வீட்டில் இருந்துகொண்டே பணம் சம்பாதிக்கலாம் என்றும், உங்களை நீங்கள் சந்தைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் இணைய தளங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள். "படம் நன்றாக இருக்கிறது என்றோ, இல்லை என்றோ தெரிவித்தால் காசு கொடுக்கிறோம்' என்கிறார்கள்; "இணைய தளத்தில் உள்ள விளம்பரத்தை 30 விநாடி பார்த்தால் போதும் காசு தருகிறோம்' என்கிறார்கள்.

உங்களுக்கு முதலாளி கிடையாது; இந்த நேரத்தில் அலுவலகம் வர வேண்டும் இவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை; இந்தப் பணியைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; என்ன வேலை செய்தாலும் இவ்வளவுதான் ஊதியம் என்ற சம்பளக் கடிவாளம் இல்லை; எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படைக் கல்வித் தகுதியோ முன் அனுபவச் சான்றிதழோ கேட்பதில்லை. உங்கள் திறமைக்கு ஏற்ற வேலையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; உங்கள் வேலைக்கேற்ற ஊதியத்தை நீங்கள் பெறலாம்; முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம்.

இணைய தளத்தில் இப்படிப் பல்வேறு விளம்பரங்கள். இதில் மோசடி செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் பலர். எனினும், உண்மையாகப் பணம் ஈட்டுவதற்கு வழி சொல்லும் சில விளம்பரங்களும் வருகின்றனவாம். ஆனால், ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறவர்களை அந்த நிறுவனமே வீட்டிலிருந்து வேலை செய்யவும் சொல்கிறார்கள்.

வேலைக்குப் போகாத பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்தபோதிலும் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது அலுவலகத்தில் வேலை செய்கிற ஆண்களும் வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்யும் நடைமுறை வந்திருக்கிறது.

அலுவலகத்தில் இடத்தைக் குறைத்து வாடகையை மிச்சப்படுத்துதல், மின்சாரச் சிக்கனம், போக்குவரத்துக்கான வாகனச் செலவைக் குறைத்தல், பணியாற்றுகிறவர்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் கூடி இருத்தலைக் குறைத்தல் முதலிய பல காரணங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று பன்னாட்டு நிறுவனங்களைச் சொல்ல வைக்கின்றன. இதனால், வீடு அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அறையே அலுவலகமாகிக் கொண்டிருக்கிறது. வீடு குடியிருப்பதற்கானது. பலர் வீடுகளில் கூட்டுக் குடும்ப முறை இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகளுக்கு வாய்ப்பு குறைவு. எனவே, பணிபுரிவோர் வீடுகள் எல்லாம் அலுவலகமாவதில் இடையூறுகள் உள்ளன. மேலும், குழந்தைகளின் விளையாட்டுச் சப்தமோ சமையலறைச் சப்தமோ தெருவில் கூவிக்கொண்டு போகும் சப்தமோ போக்குவரத்து வாகன ஒலிப்பான்களோ கேட்காத அறை வேண்டும்.

கைக் குழந்தைகள் அழக்கூடாது. எதற்காகவும் யாரும் அழைப்புமணியை அடிக்கக்கூடாது. வீட்டில் இருக்கும் வேறு யாருக்கும் தொலைபேசியோ செல்பேசியோ வரக்கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகளில் வீடு திண்டாடும். அவர்களின் பகல் நேரம் நமக்கு இரவாக இருந்த போதிலும் நள்ளிரவிலும் கூப்பிட்ட குரலுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படியெல்லாம் வெளிநாட்டினர்க்கு நம் வீட்டிலிருந்தே ஊழியம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறோம். இதனை ஆங்கிலத்தில் Work from home என்று சொல்கிறார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?

மீனா கண்ணன், பழ. கவிதா சிவமணி, இரா. மோகனசுந்தரம், வெ. ஆனந்தகிருஷ்ணன், எஸ்.சுரேஷ், செ. நாராயணசாமி, இரா. இராச அம்சன், டி.வி. கிருஷ்ணசாமி, கோ. மன்றவாணன், என்.ஆர். ஸத்தியமூர்த்தி ஆகியோர்,

ப் இல்லிரு பணி, மனையிடைப் பணி, இல்லத்திலிருந்து கடமையாற்று, இல்லத்திலிருந்து பணியாற்றல், இல்லத்திலிருந்து அலுவல் பணி, வாழ்விடப் பணி, வசிப்பிடப் பணி, வீடமர் பணி, இல்லமர் பணி, வீட்டில் இருந்தபடி வேலை, இல்லிருப்புப் பணி, இல்பணி, இல்லுறுபணி, இயலிட வாழ்க்கைத் தொழில், உட்கள ஆக்கப்பணி, இல்லூடலுவல், வாழ்விட வேலைப்பாடு, மனை உடு அலுவல், கணினிமூலம் இல்லப்பணி, இல்லத்திலிருந்து பணியாற்றுகை, இல்லிருந்து பணி, மனைப்பணி, மனைப்பணிச்சூழல், பணிமனை நடைமுறை, புதுமுறை இல்லப்பணி, வீட்டிலிருந்து வெளிவேலை, திரைவேலை ஆகிய சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

நமக்கு வீட்டு வேலை இருக்கிறது; வீட்டுக் கணக்கு இருக்கிறது; முன்பு கிராமத்தில் கணக்குப்பிள்ளைக்குத் தனி அலுவலகம் இருக்காது; வீடும் அலுவலகமும் ஒன்றாகவே இருந்தன. இப்போதும் அலுவலர் நிலையில் உள்ளவர்கள் அலுவலக நேரம் முடிந்தபின், வீட்டுக்குக் கோப்புகளை எடுத்து வந்து பார்க்கும் நடைமுறை இருக்கிறது. ஆனால், அலுவலகம் செல்லாமலே வீட்டிலிருந்தே பணியாளர்கள் அலுவலகப் பணிகளைப் பார்க்கும் நடைமுறை நமக்குப் புதியது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளியூரிலிருந்து வந்து, அறையில் தங்கிப் பணிபுரிபவர்கள் அறையையே அலுவலகமாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் வீட்டிலிருந்தே பணி செய்கிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. வீடு, அறை இரண்டுக்கும் பொதுவான சொல் வேண்டும்.

ஐய் ட்ர்ன்ள்ங் ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ் என்பதை உள்ளகப் பயிற்சி என்று சொல்லத் தொடங்கியுள்ளோம். அப்படியே Work from home என்பதை உள்ளகப்பணி என்று சொல்லலாம். அலுவலகப் பணி போன்று உள்ளகப் பணியும் வழக்கில் வருவதற்கு எளிதாக இருக்கும்.

Work from home - உள்ளகப் பணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT