சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை' என்பது கிராமத்து வாழ்வியல். Antibiotic "இல்லாத மருத்துவம் இல்லை' என்பது நகரத்து வாழ்க்கை. மருத்துவர்களில் சிலர் எதற்கெடுத்தாலும் இந்த மருந்தைக் கொடுத்து விடுவார்கள்.
இந்த மருந்தின் யுகத்தைத் தொடங்கி வைத்ததற்காக 1939- இல் ஒருமுறையும், இரண்டாம் உலகப்போரில் காயத்தை ஆற்ற, கிடைத்த இம்மருந்தின் வாரிசுக்கு 1945-இல் ஒருமுறையுமாக இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற வரலாறு இதற்கு உண்டு.
Antibiotic என்பதற்கு Fit for life, lively என்று பொருளாம். ஆனால் அய்ற்ண்க்ஷண்ர்ள்ண்ள் என்றால் உயிருக்கு எதிரி என்று பொருள். Antibacterial என்றால் பாக்டீரியாவைக் கொல்வது. இந்த மருந்தின் முதல் விதி, "பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பார்' என்பதுதான்; இரண்டாவது விதி, கட்டாயம் நேர்ந்தால் அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பார் என்பதுதான்.
இந்த மருந்து நலம் தரும் உயிரிகளையும் அழித்துவிடுமாம். இதன் பக்கவிளைவாக வயிற்றுப்போக்கு வருமாம். இருந்தாலும் இந்த மருந்துதான் புண்களை ஆற்றுகிறது; நச்சுகிருமிகளைக் கொல்கிறது; நோய் பரவாமல் தடுக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது மது அருந்தினால் பக்கவிளைவுகள் அதிகமாகுமாம். உயிருக்கு ஆபத்துகூட ஏற்படுமாம். பக்கவிளைவுகள் இல்லாமல் பயன்படுத்த மாற்று மருந்தைக் கண்டறிய உலக அளவில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த Antibiotic என்பதற்கு வாசகர்கள் பரிந்துரைத்துள்ள தமிழ்ச் சொற்கள் பின்வருமாறு:
பொன். இளங்கோவன் - நோய் நுண்ணுயிர்க் கொல்லி, எதிர் உயிர் மருந்து.
டாக்டர் ஜி. தண்டபாணி - உயிர்க்கொல்லி
தி.அன்பழகன் - கிருமி எதிரி, கிருமி அழிப்பான், உயிர் ஊறு தடுப்பி, உடல் ஊறு தடுப்பி, தீயணுக்கொல்லி, கொல்லணுக்கொல்லி, எதிர்க்கொல்லி.
ம.சுரேந்திரன் - எதிர் உயிரி, நோய் ஒழிப்பான்
செ. சத்தியசீலன் - நோய் எதிர் நுண்மங்கள்
டி.வி.கிருஷ்ணசாமி - எதிர்மறை, எதிர்விளைவு, மாற்றுவினைபுரிதல்
வெ. ஆனந்தகிருஷ்ணன் - உயிர் எதிர்ப்பு, உயிர் எதிரி, நோய்த்தொற்று, நச்சுத் தடுப்பு.
கோ. மன்றவாணன் - நோய்முறிமம், நோய்முறி, நோயணுமுறி, நோயுயிரிமுறி, நோயுயிரிக்கொல்லி, நோயணுக்கொல்லி, நோயுயிரி எதிர்மம், நோய் எதிர்மம், நுண்ணுயிரிமுறி.
செ.நாராயணசாமி - முறிவாடு
முனைவர் க. அன்பழகன் - கிருமி எதிரி, உடல் ஊறுதடுப்பி, ஊறு அழிப்பான், நோய் எதிரி, நோய் எதிர் கிருமி.
உயிரைக் கொல்வதற்காக மருத்துவர்கள் இதைக் கொடுப்பதும் இல்லை; உயிரைக் கொல்லும் என்றால் நோயாளி தன் உயிரை நினைத்து ஓடிவிடும் வாய்ப்பும் உண்டு. அது நுண்ணுயிரைக் கொல்வதாக இருந்தாலும் நோயாளியிடம் சொல்லும்போது அச்சம் வரக்கூடும். இது நோயை எதிர்ப்பதோடு மட்டும் இல்லாமல் நோய்க்கிருமிகளை அழிக்கவும் செய்கிறது. அதனால்
நோய் எதிரி என்றுமட்டும் சொல்லவும் முடியவில்லை. உடல் நலமற்றவர் தனது உடலில் உள்ள நச்சுக் கிருமிகளிடமிருந்து விடுபடவே மருத்துவரிடம் போகிறார். எனவே, மருத்துவர்கள் கொடுப்பதற்கும் நோயாளி பயன்படுத்துவதற்கும் நோக்கம் நச்சு உயிரிகளைக் கொல்வதுதான். நச்சு உயிரிகளைக் கொல்வதும் பரவவிடாமல் செயலிழக்கச் செய்வதும் இந்த மருந்தின் பயன்களாக உள்ளன. உடன் விளைவாக நலம் தரும் உயிரிகளும் அழியும் வாய்ப்பு இருக்கலாம். ஆனாலும், இந்த மருந்தின் நோக்கம் நச்சு
உயிரிகளிடமிருந்து காப்பதுதான் என்பதால்
தமிழில் இந்த மருந்தை நச்சுயிர்க் கொல்லி என்று சொல்லலாம்.
Antibiotic - நச்சுயிர்க் கொல்லி
அடுத்தவாரத் தேடல் - Survival
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.