தமிழ்மணி

சொல் புதிது - 36

கற்றவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிடைக்கிறதா? சிறப்பு கிடைக்கிறது என்றால், கற்றவர்கள் செய்வது என்ன?

முனைவர் ம. இராசேந்திரன்

கற்றவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிடைக்கிறதா? சிறப்பு கிடைக்கிறது என்றால், கற்றவர்கள் செய்வது என்ன?

அறிவுடையோரை அரசனும் விரும்புவான் என்று சொல்கிறார்கள். அரசன் விரும்பும்படி அறிவுடையோர் செய்வது என்ன?

மற்றவர்களால் முடியாத ஏதேனும் ஒன்றை அறிவுடையவர்கள் செய்ய வேண்டும்; அது மற்றவர்களுக்கும் அரசனுக்கும் தேவைப்படுகிற ஒன்றாகப் பயன்பட வேண்டும். இல்லையென்றால் மக்களும் அரசனும் கற்றவரை மதிக்க மாட்டார்கள்.

அரசர்களுக்கும் மக்களுக்கும் அப்படி என்ன தேவை இருக்கிறது? மக்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையில் எழும் சிக்கல்களைப் போக்க அறிவுடையவர்கள் பயன்படுகிறார்கள்.

பற்றவைக்கப் பயன்படும் பொருளையும் பற்றி எரிக்கும் நெருப்பைப் போல சினம் சேர்ந்தாரையும் விடாது என்று சொல்லும் கருத்தாளர்கள் மக்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

ஆளுகிறவர்களுக்கு அடுத்த நாட்டு மன்னர்களை அடக்கி வைக்க வேண்டும். தம் நாட்டு மக்களுக்கு சிக்கல் இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும்; அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை எடுத்துக் கூற அறிவுடையவர்கள் வரலாறு முழுதும் தேவைப்பட்டிருக்கிறார்கள். சங்க காலத்தில் புலவர்கள் இருந்தார்கள்; பின்னர் அமைச்சர்கள் வந்தார்கள்.

""உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணர்த்தும் கோளார்'' என்று கம்பர் கூறுகிறார். நடப்பதைக் கொண்டு இனிவரும் காலத்து நடக்கப் போவதை முன்னதாகவே உணர்ந்து தெரிவிப்பவர்கள் அமைச்சர்களாம்.

திருவள்ளுவர் சொல்கிறார், ""உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் வந்துவிட்ட துன்பம் நீக்கி இனி வராமல் முன்னதாகவே காக்கும் பெரியவர்களை ஆளுகிறவர்கள்; பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமாம். அவர்களை அமைச்சர் என்று சொல்லாமல் திருவள்ளுவர் பெரியார் என்று சொல்லி இருக்கிறார். அறிவுரை கூற ஒருவர் வேண்டுமா? அவரவர் அனுபவம் போதாதா?

மனத்தில் கிடக்கும் அக உலகத் தரவுகளும் அன்றாடம் நடக்கும் புற உலக நிகழ்வுகளும் மோதிக் கொள்கிறபோது கருத்து உருவாகிறது. புற உலக நிகழ்வுகள் தனிப்பட்டவர்களால் நடைபெறாமல் குழுவினரால் அல்லது நாட்டினரால் கூட்டாகவும் நடைபெறுகிறபோது தனிப்பட்ட மனிதரின் அக உலகத் தரவுகளைக் கொண்டு தீர்வுகாண முடியாமல் போகிறது. அதனால் மற்றவரிடம் அறிவுரை கேட்க வேண்டியதாகிறது. அதனால் ஒருவராக இல்லாமல் கூட்டாக ஒரு பொருள் பற்றித் தகவல்களைத் திரட்டி, ஆராய்ந்து, தரவுகளாக்கிச் சிந்தித்து கருத்து உருவாக்கித் தரும் அமைப்புகள் உருவாகியுள்ளன.

இப்படி உலக நாடுகள் அணிசேர்ந்து கொண்ட இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அமைச்சர்கள் போதாமல் அறிவுரை சொல்லத் தனிக் குழுக்கள் தேவைப்பட்டன. பின்னர் உலகமயமாதலில் மேலும் இப்போக்கு வளர்ந்து வருகிறது. இப்போது அரசியல், பொருளாதாரம் பண்பாடு, இராணுவம் என்று பல துறைகளிலும் Think tank அமைப்புகள் உள்ளன.

இப்போது உலகம் முழுதும் 4500க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. அரசுகளும் வணிக நிறுவனங்களும் சமூக நலம் சார்ந்தவையுமாக இந்த அமைப்புகள் இயங்குகின்றன. உலகிலேயே அதிகமான பட்ண்ய்ந் ற்ஹய்ந் அமைப்புகளைக் கொண்டிருக்கும் நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் 269 அமைப்புகள் உள்ளன.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வழி அன்னிய நாட்டுச் சிக்கல்களையும் வளங்களையும் ஆராய்வது, இன்னொரு நாட்டில் தங்கள் நாட்டின் மதிப்பை உயர்த்துவது, உள்நாட்டில் ஒரு கட்சிக்கு மக்கள் செல்வாக்கை உயர்த்துவது, ஒரு பொருளைச் சந்தைப்படுத்துவது ஆகியவற்றிற்கான கருத்து உருவாகும் களமாக திங்க் டேங்க் அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று வாசகர்கள் தெரிவித்துள்ளவை பின்வருமாறு:

ராஜசிம்மன் - சிந்தனைத் தடாகம்

இரா.மோகனசுந்தரம் - சிந்தனைக் களம்/ சிந்தனை மேடை/ சிந்தனைப் பொழில்

வீ.இராமலிங்கம் - சிந்தனைக் கொள்கலம்/ நினைவணை/ எண்ணத் தொட்டி

வானவில் மூர்த்தி - சிந்தனைப் பெட்டகம்/ நினைவுக் கருவூலம்

பெ.கார்த்திகேயன் - வல்லுநர்குழு/ பிரச்னைதீர் உயர்மட்டக் குழு/ மேலாண்மையாளர் குழு/ கருத்து வழங்கிகள்

எம்.எஸ். இரணியநாதன் - கருத்துக் களஞ்சியம்/ ஆலோசனைக் குதிர்/ ஆலோசனையகம்/ ஆலோசனைப் பெட்டகம்

உடுமலை அமிர்தநேயன் - வல்லுநர்குழு/ வல்லுநர் பேராயம்/ விற்பன்னக்குழு

இராம. வேதநாயகம் - எண்ணத்தேக்கம்

கோ. மன்றவாணன் - அறிவுரை ஆயம்/ சிந்தனை ஊற்றகம்/ அறிவூட்டகம்/ நெறிப்படுத்துக் குழு/ தீர்வாய்வகம்

ஜனநேசன் - நிபுணத்துவமிகு ஆலோசகர்க் குழு/ நிபுணத்துவ ஆயம்

சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும் மக்களிடம் செல்வாக்கு பெறவும் நாட்டு நலத்திட்டங்களை இடையூறு இல்லாமல் மேற்கொள்ளவும் வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்கவும் அன்னிய நாட்டுடன் உறவை மேம்படுத்தவுமான கருத்து உருவாகும் களமாகத் திங்க் டேங்க் இருப்பதால் கருத்தூற்றுக் களம் என்று சொல்லலாம். பாரதிதாசனும் ""தமிழர்களின் எழுதுகோல், கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறார். களம் என்பதற்கு சபை என்றும் பொருள் இருக்கிறது. எனவே, பட்ண்ய்ந் ற்ஹய்ந் என்பதைத் தமிழில் "கருத்தூற்றுக் களம்' என்றே சொல்லலாம்.

Think tank  - கருத்தூற்றுக் களம்

அடுத்த வாரத் தேடல் - Tick

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT