தமிழ்மணி

சொல் புதிது - 26

கொடுத்தும் கெடுத்தும் வெற்றி பெறுகிறார்கள்; வெற்றிக்கு டஹஹ்ம்ங்ய்ற் தேவைப்படுகிறதா? ஆடுவதற்கும் ஆடாமல் இருப்பதற்கும் Payment காரணமா?

முனைவர் ம. இராசேந்திரன்

கொடுத்தும் கெடுத்தும் வெற்றி பெறுகிறார்கள்; வெற்றிக்கு டஹஹ்ம்ங்ய்ற் தேவைப்படுகிறதா? ஆடுவதற்கும் ஆடாமல் இருப்பதற்கும் Payment காரணமா?

ஆடாமல் வாங்கும் வெற்றியைவிடவும் ஆடிக் கிடைக்கும் தோல்விகூடப் பெருமை இல்லையா? வெற்றிபெற ஆட வேண்டும்; ஆனால் வெற்றியால் ஆடக்கூடாது. வெற்றி, புகழ் கொடுக்க வேண்டும்; டஹஹ்ம்ங்ய்ற் வெற்றி புகழ் கொடுக்குமா? விளம்பரம் தரக்

கூடும். விளம்பரம் வெற்றியாகுமா? ஆனால் விளம்பர வெற்றிக்குப் போட்டிபோட்டு டஹஹ்ம்ங்ய்ற் நடக்கிறது.

கடலுள் மாய்ந்த இளம்வழுதி சொல்கிறார்: "புகழ் என்றால் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்'. அத்தகையோர் சிலராக இருப்பினும் அவர்களால்தான் உலகம் இப்போதும் இருந்துகொண்டு இருக்கிறதாம்.

கொடுப்பதால் புகழ் கிடைக்கும் என்றால் வாணிகம் ஆகிவிடும். "மேல் உலகம் இல்லை எனினும் ஈதல் நன்று' என்றார்கள். பரிசுக்காகப் புகழும் வாணிகப் புலவன் நானில்லை என்ற குரல் சங்க காலத்திலும் இருந்திருக்கிறது. கொடுக்கல் வாங்கல் வாணிகத்தில் உண்டு; பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் வாழ்க்கையிலும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. கொடுக்கல் வாங்கலில் வாங்கல் (தகறாறு) வருவதும் உண்டு. நவீனத் தொழில் நுட்பத்தில் கொடுக்கல் வாங்கலுக்கு அட்டைகள் வந்துவிட்டன. பணத்திற்குப் பதில் அட்டைகள் வந்துள்ளன. கடன் அட்டைகள், உறிஞ்சினாலும் கைவிட முடியவில்லை. விற்பவர், வாங்குபவர், வங்கி அட்டை என்ற முப்பெரும் கூட்டணியில் வாழ்க்கை ஓடுகிறது.

பண்டமாற்று இருந்தபோது, கொடுக்கல் வாங்கலில் பொருள் இருந்தது; பின்னர் பணம் வந்தது; இப்போது அட்டை வந்திருக்கிறது. ஆனாலும் கொடுக்கல் வாங்கல் தொடர்கிறது. மணமகனுக்குப் பெண்ணோடு சேர்த்துக் கொடுக்கிற பணத்தைக் கைக்கூலி என்று தமிழ் லெக்சிகன் கூறுகிறது.

உழைப்பிற்கு Payment  கொடுக்கிறார்கள்; பெறும் ஊதியத்தில் மின்சாரத்திற்கு, தொலைபேசிக்கு, கடன் அட்டைக்கு என்று மாதாமாதம் நாமும் ல்ஹஹ்ம்ங்ய்ற் கொடுக்கிறோம். ல்ஹஹ்ம்ங்ய்ற் சரியாகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் சொல்லப்படுகிறது.

Payment  என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது? வாசகர்கள் தெரிவித்துள்ளவை பின்வருமாறு:

  • பணப்பட்டுவாடா, நிதிப்பரிமாறல் - வானவில் மூர்த்தி
  • கட்டணம், ஊதியம் - சி. இராமச்சந்திரன்
  • ஊதியம், செலுத்துதல், செலுத்திய தொகை, பிரதியுபகாரம் - அ. கற்பூரபூபதி
  • செலுத்துதல், கொடுத்தல் - துரை ஏ.இரமணன்
  • செலுத்து தொகை, பணிக்கூலி - கு.கோப்பெருந்தேவி
  • ஈட்டுத்தொகை, சம்பளம் - சோலை.கருப்பையா
  • கொடுபடுமுறை, வழங்கீடு - ப.இரா.இராசஅம்சன்
  • ஊதியம், கூலி, கொடுபாடு - வெ.ஆனந்தகிருஷ்ணன்
  • செலுத்தீடு, வழங்கீடு, பணம் வழங்குமுறை, பணம் வழங்கல், பணம் கொடுப்பு - கோ.மன்றவாணன்
  • கொடுபடுதொகை, கொடுபடு ஊதியம் - ஜனநேசன்

உழைப்புக்கு, காசோலைக்கு, பயன்பெற்றதற்கு, கடனுக்கு டஹஹ்ம்ங்ய்ற் நடைபெறுகிறது. இலவசம், அன்பளிப்பு என்றெல்லாம் கொடுக்கிறார்கள். கொடுப்பதில் எல்லாம் Payment  இருப்பதில்லை; ஆனால் கொடுக்கல் வாங்கலில் இருக்கிறது; ஒன்றுக்காக ஒன்றைக் கொடுப்பதில் இருக்கிறது. புகழெனின் உயிரையும் கொடுக்குவர் என்று சொல்கிறது புறநானூறு. "கொடுப்பர்' என்று சொல்லாமல் "கொடுக்குவர்' என்று சொல்கிறது. எனவே Payment என்பதைக் கொடுப்பது என்று சொல்லாமல் கொடுக்கல் என்றே சொல்லலாம்.

Payment - கொடுக்கல்

அடுத்த வாரத் தேடல் - Cybercrime

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT