முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -12

இன்று வாழ்வியல் குறித்து ஆங்கிலத்தில் பற்பல நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றையொட்டித் தமிழிலும் பலர் வாழ்வியல் குறித்து நூல்கள் எழுதி வருகின்றனர். ஆனால், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் என்னும் துறவி வாழ்வியல் பற்றிப் பெற்றிருந்த தெளிவு நம் உள்ளத்தில் கருவம் ஓங்கி வளரச் செய்கிறது.

Updated On : 14 ஜூன், 2015 at 12:59 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:14 AM

இன்று வாழ்வியல் குறித்து ஆங்கிலத்தில் பற்பல நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றையொட்டித் தமிழிலும் பலர் வாழ்வியல் குறித்து நூல்கள் எழுதி வருகின்றனர். ஆனால், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் என்னும் துறவி வாழ்வியல் பற்றிப் பெற்றிருந்த தெளிவு நம் உள்ளத்தில் கருவம் ஓங்கி வளரச் செய்கிறது.

அரண்மனை போன்ற வீடு, பல காணி நிலம், பெட்டி நிறையப் பணம், பெருவிலையனான மகிழுந்துகள், எடுபிடிகள் இவற்றோடு வாழ்வதுதான் செல்வ வாழ்வு என்று கருதுகின்றனர். செல்வம் என்பது ஈட்டும் பொருள்களில் இல்லை; அது சிந்தையின் நிறைவில் இருக்கிறது என்று அறிவுறுத்தினார் குமரகுருபரர். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே' என்பது அவரது மணிவார்த்தை. ""செல்வ நிலையில் உன்னைவிடக் கீழே இருப்பவனைப் பார்த்து, நம் செல்வம் பெரிது என்று மகிழ்ச்சிகொள்; கல்வி நிலையில் உன்னைவிட மேலே இருப்பவனைப் பார்த்து, நாம் என்ன படித்தோம் என்று ஏக்கங்கொள்; உன் வாழ்க்கையில் மகிழ்ச்சி வெள்ளமிடும், நீ உயர்வாய்'' என்கிறார். இந்த அறிவுரையை நெஞ்சில் நிறுத்தினால் வாழ்க்கையில் தாழ்ச்சி என்பதே இல்லை. இதைப் பலர் உணரவில்லை.

இன்று எளிமை ஓர் அறம் என்பது பலருக்கும் புரியாத பாடம். நுகர்வு ஒழுக்கம் மேலோங்கி நிற்கிறது. அடுத்தவனைப் பார்த்து அவனைப்போல் நாம் வாழவேண்டும் என்னும் ஆசை பெருகியுள்ளது. வசதிகளில் புரள வேண்டும் என்னும் தணியா வேட்கை ஆட்டிவைக்கிறது. இந்த ஆடம்பர வாழ்க்கைக்காக அல்லும் பகலும் மாடாய் உழைக்கின்றனர்; பொருள் ஈட்டுகின்றனர்; கடன்படுகின்றனர். காயசண்டிகைப் பசியைப்போல் எவ்வளவு பெற்றாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று ஏங்குகிறது அவர்கள் மனம். அதற்காகப் பொருள் என்னும் பொன்மானைத் துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர். ஒரே ஓட்டம்! ஓயாத ஓட்டம்! அவர்கள் ஓட்டம் நிற்பதே இல்லை; மூச்சு நிற்கும்போதே ஓட்டமும் நிற்கிறது.

Advertisement

இது சமுதாய நோயாக வளர்ந்து வருகிறது. இதனைக் குறிக்கிற சொல்லே அச்ச்ப்ன்ங்ய்க்ஷ்ஹ என்பது. அச்ச்ப்ன்ங்ய்ஸ்ரீங் என்ற சொல்லையும் ஐய்ச்ப்ன்ங்ய்ஸ்ரீங் என்ற சொல்லையும் பிணைத்து உருவாக்கப்பட்ட சொல். இன்னும் அகரமுதலியில் ஏறாத சொல் இது. அதனால்தான் இச்சொல்லுக்குத் தமிழாக்கம் செய்வது நெருப்புச் சோதனையாக அமைந்தது என்று வழக்கறிஞர் மன்றவாணன் தெரிவித்து, பணவேட்கை, ஊதாரித்தனம், மிகுநுகர்வு நோய் ஆகிய நல்ல சொற்களைத் தந்துள்ளார். கா.மு சிதம்பரம் இணையத்தில் சென்று இதற்கான பொருள்களை முயன்று கண்டறிந்து எழுதிவிட்டு, மீதூர்ப்பு என்னும் சொல்லைப் பரிந்துரைத்துள்ளார். இச்சொல்லின் பொருளைக் குறிக்கும் வகையில், என்.ஆர். ஸத்யமூர்த்தி தணியா நுகர்வு வெறி, செல்வப் பித்து, செல்வத் துடிப்பு ஆகிய சொற்களையும், இரா. இராச அம்சன், உயிரின்ப சுரம் என்னும் சொல்லையும், சந்திரா மனோகரன் திடீர் செல்வ நோய்க்குறி என்னும் சொல்லையும், ஞா. மாதவன் பணப்பிணி என்னும் சொல்லையும் உருவாக்கித் தந்துள்ளனர்.

இவற்றுள் மீதூர்ப்பு என்னும் சொல் அளவுகடந்து செல்லுதல் என்னும் பொருளைமட்டுமே தருவதாகவும், எளிதில் பொருள் விளங்காததாகவும் அமைந்துள்ளது. என்.ஆர். ஸத்யமூர்த்தி தந்துள்ள சொற்கள் இச்சொல்லின் பொருளை முழுவதுமாக விளக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், அவற்றில் இதனை நோய் என்று காட்டும் குறிப்பு இல்லை. ஐய்ச்ப்ன்ங்ய்க்ஷ்ஹ என்பது ஒருவகைக் காய்ச்சல். அக்குறிப்பு இருக்கும் வகையில் தமிழாக்கம் அமைவது சிறப்பாக அமையும். மிகு நுகர்வு நோய், உயிரின்ப சுரம், திடீர் செல்வ நோய்க்குறி என்னும் சொற்கள் அக்குறிப்பினைக் கொண்டனவாக அமைந்துள்ளன. இவற்றை இன்னும் குறுக்கலாம். எந்தச் சொல்லைத் தமிழாக்கம் செய்கிறோமோ அந்தச் சொல்லினும் சிறியதாகவும் குறைந்த முயற்சியில் சொல்லத் தக்கதாகவும் தமிழாக்கம் அமைவதே சிறப்பு.

தேர்வு குறித்து உண்டாகும் அச்சத்தைத் "தேர்வுக் காய்ச்சல்' என்று குறிப்பது உண்டு. அதுபோலப் பணத்தின்மீது கொண்ட வெறியால் உண்டாகும் இந்தத் தணியா வேட்கையைப் பொருட்பிணி அல்லது பணப்பிணி என்று குறிக்கலாம். பிணி என்பதனினும் காய்ச்சல் என்பது

எளிதில் விளங்கும். ஆதலின், பணக்காய்ச்சல் என்று குறிக்கலாம்.

Affluenza-பணக்காய்ச்சல்

அடுத்த வாரத்திற்குரிய சொல்

Pressure Cooker (பிரஷர் குக்கர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.