தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

அருமை யுடைய பொருளுடையார் தங்கண்
கரும முடையாரை நாடார் - எருமைமேல்
நாரை துயில்வதியும் ஊர! குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்றா ரில். (பாடல்-23)

எருமையின் மீது, நாரை தூங்குகின்ற மருதநிலத் தலைவனே, குளத்தினைத் தோண்டி, (அதனிடத்தில் உறைவதற்குத்) தேரை இருக்குமிடத்தைத் தேடிச் செல்வா ரிலர். (அதுபோல), பெறுதற்கருமையை உடைய பொருளினை உடையார் தம்மிடம், காரியம் உடையவர்களைத் தேடுதலிலர். (க.து.) பொருளுடையாரிடம் கருமம் உடையார் தாமே தேடி வருவர். "குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றா ரில்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT