தமிழ்மணி

ஒழுக்கத்தின் மேன்மை

தினமணி

பழமொழி நானூறு
கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
 பொல்லாத(து) இல்லை ஒருவற்கு - நல்லாய்
 இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
 ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. (பா-64)
 நற்குணமுடைய பெண்ணே! தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை. தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை (ஆகையால்), கல்வியறிவுடைய ஒருவனுக்கு, நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும் கட்டுரையைப் பார்க்கிலும் தீமை தருஞ் செயல் பிறிதொன்றில்லை. (1) "இழுக்கத்தின் மிக்க இழிவில்லை' (2) "ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை' - இவை இச்செய்யுளிற் கண்ட பழமொழிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT