தமிழ்மணி

ஆசிரிய மேகம்!

DIN

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம்கேட்டு, தமிழ்மொழியில் வல்லுநரான தேவராசப் பிள்ளை "குசேலோபாக்கியானம்' முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
 அந்த நூலை யாத்த காலத்தில், கடவுள் வணக்கம் முதலிய கூறி புதுமையாக ஆசிரிய வணக்கம் கூறியுள்ளார். ஆசிரிய வணக்கப் பாடலில், "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திரிசிராமலையில் வளர்ந்து கலைக்கடலை உண்டு தனது மனமாகிய மலையில் தமிழ் மழையைப் போதுமளவு பொழிந்த அறிவாகிய பொய்கையை நிரப்பிய மீனாட்சிசுந்தரமாகிய மேகத்தை விரும்பி நாம் வாழ்வோம்' என உருவக அணியிலமைந்த பாடலைப் பாடியுள்ளார்.
 சீராருந் திரிசிரா மலையின்வளர்ந்
 தெக்காலுஞ் சிறப் பினோங்கும்
 ஏராருங் கலைககடன் முற்றுண்டாங்கு
 நின்றெழீஇ யென்வி வேக
 வாராருந் தடம்நிரம்ப மனப்பறம்பின்
 இனியதமிழ் மாரி பெய்த
 பேராரு மீனாட்சி சுந்தரதே
 கமுகிலைப் பேணி வாழ்வாம்!
 மனத்தை மலையாகவும்; தமிழை மழையாகவும்; அறிவைப் பொய்கையாகவும்; ஆசிரியப்பிரானை மேகமாகவும் உருவகம் செய்து பாடியிருப்பது பாடி இன்புறத்தக்கது.
 -சோமசுந்தர வேலாயுதம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT