முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு

Updated On : 26 ஜூலை, 2020 at 8:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:30 PM

சிறுதுளி பெருவெள்ளம்!

வருவாய் சிறிதெனினும் வைகலு மீண்டின்

பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவா

Advertisement

றொளியீண்டி நின்றால் உலகம் விளக்கும்

துளியீண்டில் வெள்ளந் தரும். (பாடல்-160)

விண்மீன்கள் ஒன்றுகூடி நின்றால் ஒருவகையாக இருள் நீங்க உலகத்தினை விளங்கச் செய்யும். மழைத் துளிகளும் இடைவிடாது ஒன்றுசேரின் கடலைப்போல் மிகுந்த நீரைத் தரும். (அவைபோல), (ஒருவனுக்கு) பொருள் வருவாய் சிறிதாயினும் நாடோறும் சோா்வின்றிச் சிறிதாயினும் சோ்த்து வைப்பின், மிகவும் பெரிய அளவினை உடையதாக ஆகும். ‘ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும், துளியீண்டில் வெள்ளம் தரும்’ என்பன (இரு) பழமொழிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.