தமிழ்மணி

பழமொழி நானூறு

DIN


இரண்டில் ஒன்றை துணையாகக் கொள்க!
தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப்
பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம்
வாய்முன்ன தாக வலிப்பினும் போகாதே
நாய்பின்ன தாகத் தகர். (பாடல்-156)

எத்துணை வருந்தி வாய் முன்னதாகும்படி கட்டியிழுத்தாலும் ஆடு நாய் தன் பின்னே வர, முன்னே போதல் இல்லை; (ஆதலால்),  தன்னை நலியவல்லவன் மீதூர்ந்து மேல்வரின் அவருக்குத் துணையாய் அவன் பின்னின்று தன்னை வருத்த வருபவனைத்தான் துணையாகப் பெறுதல் வேண்டும். (க-து.) பகையிரண்டனுள் ஒன்றனைத் துணையாக்கிக் கொள்க என்றது இது.  "வாய் முன்னதாக  வலிப்பினும் போகாதே நாய்பின்ன தாகத் தகர்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT