பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக, வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்துவிடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதால் கடல்நீர் முழுவதும் வற்றிவிடுமா என்ன? வற்றா
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM
களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! அறுமோ,
நரிநக்கிற் றென்று கடல் (பாடல்-177)
விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக, வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்துவிடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதால் கடல்நீர் முழுவதும் வற்றிவிடுமா என்ன? வற்றாதே! அதுபோல, தமக்கு ஏவல் செய்பவர் பலராலும் களவு செய்யப்பட்டாலும் வருவாய் மிகுந்தவருடைய பெருஞ் செல்வமும் குறைந்து போவதில்லை. "அறுமோ, நரிநக்கிற் றென்று கடல்' என்பது பழமொழி.