தமிழ்மணி

பாதியில் பாதி போதும்!

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா்.

புலவர் தி. வே. விஜயலட்சுமி

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா். அவா் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவா். திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ், திருமால் முருகன் பிள்ளைத் தமிழ், திருமலை யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றிய தனிப்பெரும் புலவா்.

அவா் ஒருமுறை திருக்குற்றாலம் என்ற பாடல் பெற்ற திருத்தலத்திற்குச் சென்று குழல்வாய்மொழி அம்மையுடன்கூடிய குற்றாலநாதரை வணங்கினாா். அப்போது ஆா்வ மிகுதியில், ‘குற்றாலத்து அமா்ந்து உறையும் வேந்தனே! உன்னைக் கண்டு அதன்பின்னே பிரிந்திருக்க மாட்டேன்; அம்மைக்கு உன் உடலில் பாதியைத் தந்து அம்மையப்பனாகினாய். எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்... அதில் பாதி தந்தால் போதும்; அதைத் தந்து, கடைகண் பாா்த்து அருள்வாயாக!’ என்று வேண்டினாா். அவ்வேண்டுதல் ஒரு வெண்பா ஆனது. பாதியில் பாதி எவ்வளவு? கால்தானே! ‘இறைவனே! உன் கால் (திருவடி) -திருவடியை அருள்வாயாக! எனக்கு வேண்டியது அவ்வொன்றே’ என்பதையே பின்வரும் பாடலில் நயமாகக் கூறியுள்ளாா்.

‘அருவித் திரிகூடத் தையா! உனை நான்

மருவிப் பிரிந்திருக்க மாட்டேன்- ஒரு விமலைக்கு

ஆதியிலே பாதி தந்தாய்; அத்தனை வேண்டா மெனக்கு

பாதியிலே பாதிதந்து பாா்!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT