பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
இறப்ப எமக்கீ திழிவரவென்று எண்ணார்பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
இறப்ப எமக்கீ திழிவரவென்று எண்ணார்
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
தால வடைக்கலமே போன்று. (பாடல்-198)
குடிப்பிறப்பினாலே மிகுதியும் சிறந்தவர்களான சிலர் தம் வறுமை காரணமாகக் குடிப்பிறப்பிலே மிகவும் தாழ்ந்தவர்களைச் சென்றடைந்து வாழ்கின்றனர். "எமக்கு இச்செயல் மிகவும் இழிவைத் தருவதாகுமே' என்றும் எண்ணாதிருக்கிறார்கள். அவர்கள் நிலைமை, அடைமானம் வைத்த நிலம்போல் ஒளி மழுங்கியதாகவே இருக்கும். "தால வடைக்கலமே போன்று' என்பது பழமொழி.