முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்தம்மைப் பிரியார் தமரா யடைந்தாரின்செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பிரியார் தமரா யடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று குருடு (பாடல்-188)

இம்மையில் ஏற்படும் பழிச் சொல்லையும், மறுமையில் அனுபவிக்க வேண்டியதான பாவத்தையும் நினைத்து, தம்மைவிட்டு நீங்காதவராக, உட்பகை கொண்டு உறவினர்போல வாழ்ந்தவரின்பால், அதனை உணர்ந்தவர், தாமும் செம்மையாகப் பகையினை மேற்கொண்டு அவர்பால் சேராது ஒதுங்கி இருப்பவர்கள் கெட்டவர்களோ? அன்று; அவர்களே அறிவுடையவர்கள். மாய்மாலம் செய்யும் கண்ணாக இருப்பதைவிட குடுட்டுக் கண்ணே பெரிதும் நன்மையாகும். "மைம்மைப்பின் நன்று குருடு' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →