முகப்பு
தமிழ்மணி

 மூடர்களின் உறவு கூடவே கூடாது

பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் தரியைக் காட்ட மாட்டார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

பழமொழி நானூறு
 தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்.
 பாரியார் இடைப்புகார், பண்பறிவார், மன்ற;
 விரியா இமிழ்திரை வீங்குநீர் சேர்ப்ப!
 அரிவாரைக் காட்டார், நரி. (பாடல்- 244)
 பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் தரியைக் காட்ட மாட்டார்கள். அதுபோலவே, அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து அதன்பால் நிலைபெற்றிருப்பவர்கள், நுண்ணறிவு இல்லாதவர்களின் நடுவிலே செல்லவே மாட்டார்கள். ஆராய்ந்து அறிந்த அறிவு உடையவர்களுடன் கலந்து நல்ல பண்புகளை மேலும் அறிவதிலேயே ஈடுபடுவார்கள். "அரிவாரைக் காட்டார் நரி' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.