முகப்பு
தமிழ்நாடு

ராமதாஸ் பாமகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

ராமதாஸ் பாமகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 2 ஏப்ரல் 2026, 3:04 pm IST
பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.
பகிர்:

ராமதாஸ் பாமகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 9 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது.

இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென முடிவு செய்திருந்த நிலையில், முதல்கட்டமாக 5 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், இன்று (ஏப்.2) 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் தேர்தலில், அணைக்கட்டு தொகுதியில் வெங்கடேஷ், ஆற்காடு தொகுதியில் அஜய்ராஜ், அரக்கோணம் தொகுதியில் மா. வெற்றிவேல், சோளிங்கர் தொகுதியில் மு. விஜயன், கீழ்வேளூர் தொகுதியில் வேத. முகுந்தன், திட்டக்குடி தொகுதியில் கருப்பன் மாணிக்கம், ஆரணி தொகுதியில் வீ. கலைமணி, கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் இரா. ஜானகிராமன், ஓமலூர் தொகுதியில் செ. சுரேஷ்குமார் உள்ளிடோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸுடனான மோதலுக்குப் பின்னர் அவரின் மகன் அன்புமணி வசமிருக்கும் பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், தனித்துக் களம்காண முடிவெடுத்துள்ள ராமதாஸ் முதல்கட்டமாக 5 பேரும், இரண்டாம் கட்டமாக 10 பேரும் அறிவித்திருந்தார். தற்போது மூன்றாம் கட்டமாக 9 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

சேலம் மேற்கு தொகுதியில் அருள், வந்தவாசி தொகுதியில் முரளி சங்கர், கும்பகோணம் தொகுதியில் ம.க. ஸ்டாலின், விருத்தாசலம் தொகுதியில் சுரேஷ், மயிலாடுதுறை தொகுதியில் சக்திவேல், திருப்போரூர் தொகுதியில் ஏகாம்பரம், உத்திரமேரூர் தொகுதியில் ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சங்கர், திருவள்ளூர் தொகுதியில் வெங்கடேசன், செஞ்சி தொகுதியில் கனல் பெருமாள், தருமபுரி தொகுதியில் சரவணன், ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி ரவி, செய்யாறு தொகுதியில் தி. கா.சீனிவாசன், அந்தியூர் தொகுதியில் கோபால், புவனகிரி தொகுதியில்  பாலமுருகன்  உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக அதிகாரபூர்வ தலைராக இருக்கும் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தனது மருமகளான சௌமியாவுக்கு எதிராக சரவணன் என்ற வேட்பாளரை ராமதாஸ் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The PMK's third list of candidates, released by Ramadoss, features nine candidates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.