முகப்பு
தமிழ்மணி

பெண்ணான பேர் இரண்டு பேர்!

இரட்டைப் புலவர்களின் "தில்லைக் கலம்பக'த்தில் சிவபெருமானை "இரண்டு' என்ற எண்ணோடு தொடர்புபடுத்திப் பாடிய பாடல் இது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:


இரட்டைப் புலவர்களின் "தில்லைக் கலம்பக'த்தில் சிவபெருமானை "இரண்டு' என்ற எண்ணோடு தொடர்புபடுத்திப் பாடிய பாடல் இது.

சிவபெருமானின் காதில் குண்டலங்களாகத் தொங்கும் நாகர்கள் கம்பளர், அசுவதரர் என்னும் இருவர். சிவபெருமானின் ஆடலைத் தில்லையில் கண்டோர் பதஞ்சலி, வியாக்ரபாதர் என்னும் இருவர். சிவபெருமானின் முழு உருவைக் காண முற்பட்டு, காண முடியாமல் நின்றோர் மும்மூர்த்திகளில் மற்ற இருவரான பிரம்மாவும் விஷ்ணுவும். சிவபெருமானுக்குப் பிறந்த இரு குழந்தைகளுமே பார்வதியின் முலைப்பால் உண்ணாதவர்கள். சிவபெருமானுக்கு மனைவியாக இருப்பவர்களும் பார்வதி, கங்கை என்னும் இருவர்.

இரட்டைப் புலவர்கள் தாம் இரட்டையானதால் சிவபெருமானையும் இரட்டையோடு தொடர்புப்படுத்திப் பாடிய அந்தப் பாடல் இதோ:

காதில் இரண்டு பேர்; கண்டோர் இரண்டு பேர்;
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்; - பேதைமுலை
உண்ணார் இரண்டு பேர்; ஓங்குபுலி  யூரருக்குப் 
பெண்ணான பேர் இரண்டு பேர்'

(கோவை எழிலனின் "உள்ளம் படர்ந்த நெறி'  நூலிலிருந்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.