தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அரசனே மக்களுக்கு நீதி வழங்குபவன். அவ்வாறு நீதி வழங்கும்போது இவர் எமக்கு நண்பர், பகைவர் என்று முன் எண்ணம் கொள்வான் ஆயின் தீர்ப்பு குறை உடையதாகி விடும்.

தினமணி

எம் கண் அனையர் எனக் கருதின், ஏதமால்,
தங்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க, ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.   (பாடல்: 322)


அரசனே மக்களுக்கு நீதி வழங்குபவன். அவ்வாறு நீதி வழங்கும்போது இவர் எமக்கு நண்பர், பகைவர் என்று முன் எண்ணம் கொள்வான் ஆயின் தீர்ப்பு குறை உடையதாகி விடும். எனவே, தனக்கு வேண்டியவராக  இருந்தாலும் தவறு செய்தவர் ஆயின் வன்கண்ணனாகி உரிய தண்டனையை வழங்கியே ஆக வேண்டும். மாறாக மென்கண்ணனாகித் தவறான தீர்ப்பை வழங்கினால் அவன் அரசாளும் தகுதியை இழந்தவன் ஆவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT