செறிவுடைத் தார் வேந்தன் செவ்வி மாறாமல்,
அறிவு உடையார் அவ்வியமும் செய்ப - வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. (பாடல்: 323)
மலர்களை நெருக்கமாக அமைத்துத் தொடுக்கப்பெற்றுள்ள மாலையை அணிந்துள்ள அரசன் தகைமையில் இருந்து விலகிச் சென்றுவிடாமல் அறிவுடைய பெரியோர், அரசர் பிழைபடாது இருத்தற்கு மிகைப்பட்ட சிலவற்றை வறிதே செய்து காப்பர். உணவு உண்ண மறுக்கும் குழந்தைக்கு நிலாவைக் காட்டி மருட்டி, உணவு உண்ண வைக்கும் தாய்மாரைப் போலச் செயல்படுவர். அத்தகைய சமயங்களில் உண்மையானவற்றைச் சொல்லி அரசரைத் தெளிவுறுத்துதல் எளிதன்று என்பதால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.