தமிழ்மணி

இளமையில் தருமம்

மரங்களிலே முதிர்ச்சியுற்றிருந்த கனிகள் மட்டுமே அல்லாமல், நல்ல காய்களும் கடுங்காற்றினால் உதிர்ந்து போதல் நிகழ்வதும் உண்டு.

இணையதளச் செய்திப் பிரிவு

மற்றறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே, கரவாது, அறஞ்செய்ம்மின்!

முற்றி இருந்த கனியொழியத், தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு!

(பாடல் 19 அதிகாரம் இளமை நிலையாமை)

மரங்களிலே முதிர்ச்சியுற்றிருந்த கனிகள் மட்டுமே அல்லாமல், நல்ல காய்களும் கடுங்காற்றினால் உதிர்ந்து போதல் நிகழ்வதும் உண்டு. அதுபோலவே, முதியவர்கள் மட்டுமல்லாமல் இளமைப் பருவத்தினரும் மாண்டு போதல் நிகழ்வதும் ஏற்படலாம். நல்ல செயல்களை நம்முடைய பின்காலத்தே அறிந்து செய்வோம்; இப்போது யாம் இளையோம்தாமே என்று கருத வேண்டாம். கையில் பொருள் வந்து கிடைத்த பொழுதிலேயே உள்ளத்தில் கரவு ஏதுமின்றி அறஞ் செய்வதிலே ஈடுபடுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

கனமழையால் 200 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT