'படுமழை மொக்குளிற் பன்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கை' யென் றெண்ணித்,-தடுமாற்றம்
தீர்ப்போம் யாம்' என்றுணருந் திண்ணறி வாளரை
நேர்ப்பார் யார், நீணிலத்தின் மேல்?
(பாடல் 27 அதிகாரம்: யாக்கை நிலையாமை)
வீழ்கின்ற மழைநீரிலே தோன்றும் குமிழிகள் போலப் பன்முறையும் தோன்றித் தோன்றி அழிகின்ற நிலையாமையை உடையது இந்த உடல். இப்படி எண்ணி, இப்பிறவியிலே குறுக்கிடும் தடுமாற்றங்களை யாம் போக்கிக் கொள்வோம் என்று அறிந்து உணர்கின்ற உறுதியான அறிவுடையவர்களை ஒத்திருப்பவர்கள், இந்தப் பெரிய உலகத்தின்மேல் வேறு யாவர் இருக்கின்றார்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.