தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

சாகித்திய அகாதெமி விருதுக்கு நிகரான மரியாதை பெற்ற விருதாக மாறி வருகிறது கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கி.ரா. விருது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் சாகித்திய அகாதெமி விருதுக்கு நிகரான மரியாதை பெற்ற விருதாக மாறி வருகிறது கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கி.ரா.' விருது. சிறந்த படைப்பிலக்கியவாதி ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குவதுடன், சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் அந்தப் படைப்பாளிக்கு ரூபாய் 5 லட்சமும் கேடயமும் வழங்கப்படுகிறது.

கி.ராஜநாராயணன் பெயரிலான விருதுக்கு இந்த ஆண்டு சு.வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இன்று கோவையில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு விருது வழங்கி கெüரவிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகா

தேவன் வருகிறார். தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கும் நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளும் விழாவைத் தவறவிடக்கூடாது என்று நானும் கிளம்பி வந்து விட்டேன்.

தனது பேராசிரியர் பணிக்கு இடையில் சிறுகதை, நாவல், இலக்கியக் கட்டுரைகள் என்று தொடர்ந்து இயங்கி வருபவர் வேணுகோபால். நுண்வெளி கிரகணங்கள், கூந்தப்பனை, வலசை, ஆட்டம், நிலம் என்னும் நல்லாள் உள்ளிட்ட பல நாவல்களும் 20}க்கும் மேற்பட்ட சிறுகதை, கட்டுரை நூல்களும் படைத்திருக்கும் வேணுகோபாலை அடையாளம் கண்டு விருதுக்குத் தேர்ந்தெடுத்து இருக்கும் விழாக் குழுவினர்களுக்குப் பாராட்டுகள்!

ஒருபுறம் உக்ரைன்; இன்னொரு புறம் காஸô; ஆப்பிரிக்காவில் சூடான்; கிழக்கு ஆசியாவில் மியான்மர்} இப்படி எங்கு பார்த்தாலும் குண்டு வீச்சும்

துப்பாக்கிச் சப்தமும், பஞ்சம் பட்டினிகளும், உயிரிழப்புகளும் என உலகம் அமைதியை இழந்திருக்கிறது. ஒருபுறம் குண்டு வீச்சுக்கு அனுமதி வழங்குபவர்கள், இன்னொரு புறம் சமாதானத்துக்கான நோபல் விருது தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று விழைகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது.

கவிஞர் அறிவுமதி கையொப்பமிட்டு ஐந்து நாட்களுக்கு முன்பு அவரது புதிய படைப்பை எனக்கு அனுப்பித் தந்திருந்தார். உலக நாடுகள் ஒருங்கிணைந்து

ஐ. நா. என்கிற உலக அற மன்றம்' கட்டமைக்கப்படாத காலத்திலேயே போர் வேண்டாம்; படை எதற்கு?' என 3,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குரல் எழுப்பிய தமிழ்ப் புலவர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். அந்த புறநானூற்றுப் புலவர்களை நினைவுபடுத்தும் விதத்திலும், அணு ஆயுத அழிவுகளைத் தடுத்தே ஆக வேண்டும் என்கிற அறச்சீற்றத்திலும் தனது பேனாவைச் சுழற்றி இருக்கிறார் அறிவுமதி.

உலக அமைதிக்கான நூல் புறநானூறு' என்பதைப் பதிவு செய்யும் கவிஞர் அறிவுமதி, ஒவ்வொரு பாடல் வரியையும் தேர்ந்தெடுத்து விளக்கி, ஆங்காங்கே திருக்குறள், கம்ப காதை, மதுரைக்காஞ்சி என்று ஏனைய தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களை இணைத்திருப்பது புதிய முயற்சி மட்டுமல்ல அரிய முயற்சியும்கூட. ஒரே ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறேன்}

மன்னா, பாணர்களுக்கு தங்க மலர்கள் சூட்டுகிறாய்; நம் போன்ற புலவர்களுக்கு யானைகளோடு தேர்களையும் நீட்டுகிறாய்; ஈடற்ற வெற்றி பெற்றேன்' எனும் இறுமாப்போடு எனைப் பாராட்டிப் பாடல் தாருங்கள்' என தமிழ்ப் பிச்சையும் கேட்கிறாய், வெட்கமாக இல்லையா உனக்கு?

அடுத்தவர் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களது, வாழ்வைப் பாழ்செய்து அள்ளிக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை கொடுத்து வள்ளலே என்று என்னை வாயார புகழுங்கள் என்கிறாயே அறம் தானா இது? '

நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் (12) இது..

பாணர் தாமரை மலையவும், புலவர்

பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,

அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!

இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,

இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?

கரடுமுரடான கற்களை ஓயாத ஓட்டத்தினால் எப்படி ஆறானது உருட்டி உருட்டி அழகான கூழாங்கற்களாக மாற்றுகிறதோ அதேபோல, தங்களது இடையறாத எண்ணத்தாலும், எழுத்தாலும் போர் இல்லாத உலகத்தை உருவாக்கித் தரலாம் என்கிற உயரிய நோக்கத்துடன் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழ்ப் புலவர்கள் சிந்தித்திருக்கிறார்கள் என்பதைத் தனது அழகு பாணியில் பதிவு செய்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி.

தஞ்சை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருக்கும் விமூர்த்தானந்தர் ஆசிரியராக இருந்தபோதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக இதழ் லட்சம் பிரதிகளைக் கடந்து, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் மிகப்

பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. சுவாமி விமூர்த்தானந்தர் தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் விவேகானந்தர் வேண்டிய 100 இளைஞர்களில் நீங்களும் ஒருவரா?'

இந்த நூல் சுவாமி விவேகானந்தரைத் துதி பாடும் நூல் அல்ல. சுவாமி விவேகானந்தர் விரும்புவது பிரசாரங்களையோ போற்றுதல்களையோ அல்ல. அவரது கருத்துகளைக் கடைப்பிடிப்பவர்களையே அவர் தேடிக் கொண்டிருக்கிறார் என்கிற சுவாமி விமூர்த்தானந்தரின் முன்னுரையுடன் தொடங்குகிறது கட்டுரைத் தொகுப்பு.

இந்த நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் சுவாமி விவேகானந்தரே. அவரிடமிருந்துதான் நவ இந்தியா ஆரம்பிக்கிறது' என்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார் என்றால், சுவாமிஜியின் மகிமையைப் புரிந்துகொள்ளலாம். சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கியிருக்கும் இந்தப் புத்தகம் கட்டுரைகளின் தொகுப்பு அல்ல. சுவாமி விவேகானந்தர் குறித்த தகவல் பெட்டகம்!

தமிழ்நாடு அரசின் உதவி பெறும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கம் சென்ற ஞாயிறன்று சென்னை முகப்பேர் மேற்கு, அமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடத்தியது.

அதாவது, கப்பலோட்டிய தமிழன்வ.உ.சி.யின் பிறந்த நாள், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா, 2023}24}ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெற்றவர்களுக்குப் பாராட்டு என்று முப்பெரும் விழா.

அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைத்தபோது மறுத்து விடவா முடியும்? அந்த விழாவுக்குப் போனபோது எனக்கு அன்பளிப்பாக ஒருவர் தந்த கவிதைத் தொகுப்பு, நீலகண்டத் தமிழன் எழுதிய தலைப்பு இன்னும் வைக்கவில்லை'. அதிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதை இது...

முன்னூறு பவுன்

சீர் கேட்டவனுக்கு

மூன்றும் பெண்களாய்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பருவதமலையில் ஏறிய பக்தா் கீழே விழுந்து உயிரிழப்பு

துறையூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் அருகே 3 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

கரூா் புதிய பேருந்து நிலையம் இன்றுமுதல் செயல்படும்

SCROLL FOR NEXT