வெள்ளிமணி

கோயிலில் நாட்டுப்புறக் கலைச் சிற்பங்கள்

தமிழ்நாட்டில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க, கலையழகு மிக்க சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் உள்ளன. தமிழகச் சிற்பிகள் கற்களை உளி கொண்டு செதுக்கி, அவற்றுக்கு உயிர் ஊட்டினார்கள். பழமையான பல  கோயில்களின் தூண்கள

கி.ஸ்ரீதரன்

தமிழ்நாட்டில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க, கலையழகு மிக்க சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் உள்ளன. தமிழகச் சிற்பிகள் கற்களை உளி கொண்டு செதுக்கி, அவற்றுக்கு உயிர் ஊட்டினார்கள். பழமையான பல  கோயில்களின் தூண்களிலும், கோபுரங்களிலும் காணப்படும் அழகிய சிற்பங்களை வெளிநாட்டவரும் கண்டு வியக்கின்றனர்.

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் உள்ள ஐராவதீசுவரர் கோயிலும் இத்தகைய அற்புதச் சிற்பங்களைக் கொண்டதாகும். இக்கோயில் இரண்டாம் ராஜராஜசோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. "உலகப் பாரம்பரிய வரலாற்றுச் சின்னம்' என்ற பெருமை உடையது. தூண்கள், மண்டபங்கள், விதானம் அனைத்திலும் நடனமாடும் மகளிர் சிற்பங்கள் மற்றும் அழகிய தெய்வ உருவங்களைக் கண்டு மகிழலாம். சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் முழுவதும், தொடர்கதை போன்று சிறு சிறு சிற்பங்களாகக் காணப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள "ராஜ கம்பீரன்' என்று அழைக்கப்படும் மண்டபம், சிற்பக் களஞ்சியமாகவே விளங்குகிறது.

இம்மண்டபத்து தூண் ஒன்றில் நாட்டுப்புறக் கலையின் சிறப்பினை எடுத்துக் கூறும் சிற்பங்களும் காணப்படுகின்றன. ஒருவன் இரு கைகளின் மேல் கத்தியை வைத்துக் கொண்டு நடனமாடுகிறான். அருகிலே வாத்தியம் வாசிக்கும் இசைக் கலைஞன்! மற்றொரு சிற்பத்தில் இடது கைக்கு மேலே பானை ஒன்று வைத்து ஆடாது நிற்க வைக்கும் அரிய காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.  அக்காலத்தில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலையின் ஒரு பகுதியை இச்சிற்பங்கள் எடுத்துக் கூறுகின்றன.

நாட்டுப்புறக் கலையின் தொன்மையினை எடுத்துக் கூறும் தாரசுரம் கோயில் சிற்பங்களைச் சென்று பார்த்து மகிழ்வோம்! அவற்றின் அருமையைக் கண்டு பெருமை அடைவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT