முகப்பு
வெள்ளிமணி

சகல ஆத்துமாக்கள் தினம்

மனித குலத்தை மீட்க, மானிட மகனாக இவ்வுலகில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார்; பிறகு மூன்றாம் நாள் மகிமையுடன் உயிர்த்தெழுந்தார். இதன் மூலம், தான் இறைமகன் என்பதை மனித சமுதாயத்துக்கு

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:02 PM
பகிர்:

மனித குலத்தை மீட்க, மானிட மகனாக இவ்வுலகில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார்; பிறகு மூன்றாம் நாள் மகிமையுடன் உயிர்த்தெழுந்தார். இதன் மூலம், தான் இறைமகன் என்பதை மனித சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டினார்.

இந்த மறையுண்மையே கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மனிதர்கள் மறுவுலகில் நிலை பெற்று வாழ்வர் என்பதை உணர்த்தவே இயேசு கிறிஸ்து இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

    தான் உயிரோடிருக்கும்போது நடந்த நிகழ்ச்சியின் மூலம் இவ்வுண்மையைத் தெளிவாக விளக்குகிறார் இயேசு கிறிஸ்து. அவரது நண்பரான இலாசர் இறந்த செய்தியைக் கேட்டு அவனது சகோதரிகளான மார்த்தா, மரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறுவதற்காக "பெத்தானியா' என்னும் ஊருக்குச் சென்றார் இயேசு. அவரைக் கண்டதும் மார்த்தா அழுது கொண்டே, "ஆண்டவரே! நீர் இங்கேயிருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டானே' என்று உருகினாள். இயேசு அவளிடம், ""உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே! என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பினும் வாழ்வார்.... என்றுமே சாகமாட்டார்'' என்று கூறினார்; பின்பு கல்லறைக்குச் சென்றார். இறந்த லாசரின் கட்டுக்களை அவிழ்க்கச் சொல்லியபின் அவனை உயிரோடு எழுப்பினார் (யோவான் 11).

     இந்த விசுவாசக் கொள்கையின் காரணமாகவே கிறிஸ்துவர்கள் இறந்தோரைப் புதைக்கும் கல்லறைகளைத் தோட்டமாகவே பராமரித்து வருகின்றனர்.

   ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2}ஆம் தேதியை இறந்தோரை நினைவுகூரும் தினமாக கிறிஸ்துவர்கள் அனுசரித்து வருகின்றனர். அன்று தங்கள் உற்றார், உறவினர், நண்பர்களின் கல்லறைகளை நன்கு கழுவி சுத்தம் செய்கின்றனர்; மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர். இறைவனின் அருகில் வாழும் பேறு பெற்ற இந்த ஆன்மாக்களிடம் நாம் வேண்டினால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற விசுவாசத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்கின்றனர். இந்நாளை, "சகல ஆத்துமாக்கள் தினம்' என்றும் அழைப்பர்.

    மனிதர்களுடைய வாழ்நாள் குறுகியது; பயனற்றது; நிழலைப் போல் மறைவது (சபை உரையாளர்). எனவே "உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லும் முன்னர், உன்னைப் படைத்தவனை உள்ளத்தில் நினை' என்கிறது பைபிள்.

    இறந்த பின்னும் இறைவன் நிழலில் வாழ விரும்புவோர் செய்ய வேண்டியது என்ன? தெய்வப் புலவர் வள்ளுவர் கூறுவதுபோல், "நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும்' நாவடைத்து விக்கல் வரும் இறுதி நேரம் வருமுன் அறத்தை விரைந்து செய்ய வேண்டும். வற்றாமல் அன்பு செலுத்துவதிலே, வரம்பின்றிக் கொடுப்பதிலே, வருந்துவோர்க்கு உதவுவதிலே வாழ்நாளைச் செலவிட வேண்டும். தன்னலமின்றி பிறருடன் கூடி உழைக்க வேண்டும். துன்பம் பிறர்க்கு என்றால், அது நம் தோளில் நின்று கனக்க வேண்டும்.

   ""மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்'' என்று இயேசு கூறுவதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், இறப்பினும் வாழும் பேறு பெற்றவர் ஆவோம் என்பதில் ஐயமில்லை. (மத்தேயு 25:40).

முழு கட்டுரையைப் படிக்க →