யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பலரும் பல நேரங்களில் சொல்லிக் கேட்டிருப்போம். உலகத்தை உற்று நோக்க இந்தத் திருவார்த்தையைத் தந்தருளியவர் திருமூலர். அவரின் திருமந்திரப் பாடல் இது...
""யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே'' -
""இறைவனின் திருவருளால் யான் இறைவனது இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினைப் பற்றி நின்ற உணர்ச்சி தரும் மந்திரமாகும். இந்த மந்திரத்தைப் பற்றப் பற்ற இறைவன் திருவடி ஞானம் கிடைக்கப் பெறும்''.
இந்தப் பாடலில், தாம் அடைந்த இன்பத்தை பிறரும் அடையுமாறு செய்வது பெரியோர் இயல்பு. எனவே "இவ்வையகம் பெறுக' என்றார். "மறைபொருள் பெருமைக்கு உரிய இடம்' என்றார். "சிவ சிவ எனும் மகாமந்திரத்தை மந்திரம்' என்றார். இதையே மறைபொருள் என்று கூறி, இதனை நாவால் உள்ளுக்குள் உச்சரிக்க வேண்டும் என்றார். இடைவிடாது உச்சரிக்க வேண்டும் என்பதை, பற்றப் பற்ற என்ற பதத்தால் மொழிந்தார் திருமூலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.