வெள்ளிமணி

புறக்கணிக்க வேண்டும்!

தீண்டத்தகாத தீய பழக்கங்களில் முந்தி நிற்பது மது. சிந்தனையைக் கெடுத்து சீரழிக்கும் நிந்தனைக்குரியன போதைப் பொருட்கள். மது போதை மற்ற தீய கொடுஞ்செயல்களை செய்யத் தூண்டும் தூண்டில். போதை, அறிவை அழிக்கும்; அ

மு. அ. அபுல் அமீன்

தீண்டத்தகாத தீய பழக்கங்களில் முந்தி நிற்பது மது. சிந்தனையைக் கெடுத்து சீரழிக்கும் நிந்தனைக்குரியன போதைப் பொருட்கள். மது போதை மற்ற தீய கொடுஞ்செயல்களை செய்யத் தூண்டும் தூண்டில். போதை, அறிவை அழிக்கும்; அநீதிக்கு அழைத்துச் செல்லும்; ஆன்றோர், சான்றோர் முன்பு அவமானப்பட வைக்கும்; தன் மதிப்பைத் தானே இழக்கச் செய்யும்; சில மணி நேர மகிழ்ச்சிக்காக பலரிடம் மதிப்பு இழக்க வேண்டுமா?

அதனால்தான் அல்குர் ஆனின் 2:219வது வசனம் ""மதுவிலும் சூதிலும் பெரும் பாவங்கள் உள்ளன. அவற்றில் (உல்லாச) பயன்கள் இருந்த பொழுதிலும், அதில் உள்ள பாவங்கள் பயனை விடப் பெரியது'' என்று கூறுகிறது.

போதையில் இருப்போர் தன் நிலையறியாது தடுமாறுவர். அந்நிலையில் நற்செயல்களை செய்தல் கூடாது என்றும் குர் ஆனின் 4:43வது வசனம் இவ்வாறு மொழிகிறது.

""நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள இயலாத நிலையில், போதையிலிருக்கும் பொழுது தொழுகைக்கு செல்லாதீர்கள்''.

""மது, சூது முதலியன அருவருக்கத்தக்க தீய செயல்கள். அவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்'' என்றும் திருக்குர் ஆனின் 5:90வது வசனம் வலியுறுத்துகிறது.

மது மற்றும் பிற போதைப் பொருட்கள் பகையை ஏற்படுத்தி பொறாமையை உருவாக்கி நல்லன செய்ய விடாமல் தடுத்து அல்லன செய்யுமாறு மாற்றிவிடும். ஆகவே போதையைப் புறக்கணிக்க வேண்டும்.

""மதுவும் சூதும் உங்களுக்கிடையே பகையையும், பொறாமையையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நிலையிலிருந்தும், தொழுகையிலிருந்தும் தடுத்து விடும் தீமைகள். ஆகவே அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும்'' என்றும் குர் ஆனின் 5:91வது வசனம் எச்சரிக்கிறது.

குர் ஆனின் வழி நடந்து அல்லாஹ்வின் அருளைப் பெற்று வாழ விரும்புவோர் மதுவை வெறுத்து ஒதுக்க வேண்டும். அப்பொருட்களின் விற்பனையிலும் ஈடுபடாது விலகி இருக்க வேண்டும். அப்போது இலகுவாய் இறைவன் அருளைப் பெறலாம். உலகம் புகழ உயர்வாய் வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT