முகப்பு
வெள்ளிமணி

திருமால் தங்கிய தலம்!

நினைத்தாலே முக்தி'' என்று சொல்லப்படும் திருவண்ணாமலை திருத்தலத்திற்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் (பருவதமலை செல்லும் வழி) உள்ளது

Updated On : 20 டிசம்பர், 2025 at 10:28 AM
பகிர்:

நினைத்தாலே முக்தி'' என்று சொல்லப்படும் திருவண்ணாமலை திருத்தலத்திற்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் (பருவதமலை செல்லும் வழி) உள்ளது அரிதாரிமங்கலம் என்னும் சிற்றூர். இங்குள்ள சிவன் ஆலயம் மிகப் பழமையானது.
 வராக உருவம் எடுத்த திருமால் சிவபெருமானின் திருவடியை தேடிச் சென்று முடியாமல் போய் திரும்பி வந்த தருணத்தில் இத்தலத்திற்கு வந்து தங்கியதாக செவி வழிச் செய்தி. மற்றொரு தகவலின்படி இங்குள்ள லிங்கம் செய்யாற்றின் கரையில் முருகப் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சப்த கைலாச தலங்களில் ஒன்றாகும். மூல மூர்த்தியின் திருநாமம் கைலாசநாதர். அம்பாளின் திருநாமம் பெரிய நாயகி என்கிற பிரகன்நாயகி. வசீகரத் தோற்றத்துடன் காண்போர் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடன் திகழ்கிறாள். பழைமையான இக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. தற்போது திருப்பணிகள் தொடங்கப்
 பட்டுள்ளன.
 குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது இக்கோயில். மேலும் கைலாசநாதரை வழிபடுபவர்கள் திருமாலின் அருளுக்கும் பாத்திரமாகலாம்.
 மேலும் தகவலுக்கு 044-28152533 அல்லது 94427 43803.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.