ஆபத்துகள் அகலுகின்றன!
இஸ்லாமியப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே செல்லும் அவசியம் ஏற்படும்போது, அவசியம்
வெள்ளிமணிஆபத்துகள் அகலுகின்றன!
இஸ்லாமியப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே செல்லும் அவசியம் ஏற்படும்போது, அவசியம்
இஸ்லாமியப் பெண் தனது வீட்டை விட்டு வெளியே செல்லும் அவசியம் ஏற்படும்போது, அவசியம்
ஃபர்தா அணிந்துதான் செல்ல வேண்டும். ஃபர்தா அணியாது சென்றால், தீமையிழைக்க சைத்தான் மூலமாக சர்ந்தர்ப்ப சூழ்நிலைகள் அப்பெண்களை நெருங்குவதற்கு தயாராக காத்திருக்கும் என்பது உண்மையே!
இதுபற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைக் காண்போம். ""நபியே! உம்முடைய மனைவி - பெண்மக்கள் மற்றும் உம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து பெண் மக்களையும், அவர்களது தலை முந்தானைகளை இறக்கிக்கொள்ளும்படி கூறுவீராக! அதனால், அவர்கள் எவருடைய துன்பத்திற்கும் உள்ளாகாது இருப்பதற்கு இது மிக சுலபமான வழியாகும் (அல்குர் ஆன்:33:59)''.
ஃபர்தா என்பது பாரசீக மொழிச் சொல். இச்சொல்லுக்கு திருக்குர் ஆனில் பயன்படும் அரபிச் சொல், "ஹிஜாப்' என்பதாகும். இறைவன் ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள உடல் உறுப்புக்களை மறைக்க வேண்டிய பகுதிகளாக படைத்துள்ளான். ஆனால், பெண்களுக்கு மட்டும் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் மறைக்க வேண்டிய பகுதிகளாக இறைவன் படைத்துள்ளான். எனவே, பெண்கள், "ஹிஜாப்' (ஃபர்தா) கட்டாயம் அணிய வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் முழுமையான பாதுகாப்பையும், உயர்வான அந்தஸ்தையும், புகழ்மிக்க வாழ்க்கையையும் வழங்கியுள்ளான்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், அன்னாரின் மனைவிமார்களான உம்மு ஸல்மான் (ரலி), மைமூனா (ரலி) ஆகியோருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, கண் பார்வையற்ற நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்தார். உடனே, அண்ணலார் ""நீங்கள் இருவரும் உள்ளே சென்று விடுங்கள்''
என்றனர்.
""யாரஸýலுல்லாஹ்! இவர் குருடர் அல்லவா? இவர் எப்படி எங்களைக் காண முடியும்?'' என்றவுடன்,""நீங்கள் குருடியாகி விட்டீர்களா? நீங்களுமா அவரைப் பார்க்க முடியவில்லை?'' எனச் சற்று கடுமையாக நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதன்மூலம் குருடர்கள் முன்னால்கூட ஃபர்தா அணிய வேண்டும் என்பதை நபிகளார் வலியிறுத்திக் கூறியுள்ளார்கள் என்பதை உணர முடிகிறதல்லவா!
அன்னை ஆயிஷா (ரலி), தனது தந்தையார் அபூபக்கர் (ரலி) அவர்களின் அடக்கவிடம் செல்லும்போது, ஃபர்தா அணியாமல் சென்று வருவார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்ட பின், ஃபர்தா அணிந்தே சென்றார்கள் என்பது வரலாறு. இதனை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் ஃபர்தா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும் என்பது மிகத் தெளிவாக உறுதியாகி விட்டது. எனவே, இஸ்லாம் கூறும் (ஹிஜாப்) ஃபர்தாவை முஸ்லிம் பெண்கள் அணிவதால் ஆபத்துகள் அகலுகின்றன.