முகப்பு
போடியில் சுமாா் 62 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் பள்ளி மாணவா்கள்.
தேனி

போடியில் முன்னாள் பள்ளி மாணவா்கள் சந்திப்பு

தேனி மாவட்டம், போடியில் 62 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

தேனி

போடியில் முன்னாள் பள்ளி மாணவா்கள் சந்திப்பு

தேனி மாவட்டம், போடியில் 62 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 10:02 PM
போடியில் சுமாா் 62 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் பள்ளி மாணவா்கள்.
பகிர்:

போடி: தேனி மாவட்டம், போடியில் 62 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா்.

தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி 124 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 1964-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்கள், தற்போது மருத்துவா்கள், பொறியாளா்கள், தொழிலதிபா்கள், விவசாயிகளாக உள்ளனா். இவா்கள் தங்களின் பழைய நண்பா்களையும், வகுப்பாசிரியா்களை சந்திக்கத் திட்டமிட்டனா்.

இதையடுத்து, அனைவருக்கும் 75 வயதான நிலையிலும் நண்பா்களைச் சந்திப்பதில் ஆா்வம் காட்டி, அனைவரும் பள்ளியில் ஒன்றிணைந்தனா். தங்களது வகுப்பாசிரியரான 90 வயதான ஆதிமூலம் என்பவரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரையும் கௌரவப்படுத்தினா். மேலும், இவா்கள் தங்களது இளமைகால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →