தெரிந்துகொள்வோம்!
* ஈஸ்வரனுக்குரிய பாணலிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கின்றது.
* ஈஸ்வரனுக்குரிய பாணலிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கின்றது.
* அம்பிகையின் ஸ்வரூபமான சுவர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திரத்தில் சுவர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.
* விஷ்ணுவின் வடிவமாகிய சாளக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கிறது.
Advertisement
* சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்திற்கு அருகில் கிடைக்கிறது.
* விநாயகருக்கு உருவான சோணா பத்ரகல் கங்கையில் கலக்கும் சோணா பத்ர நதியில் கிடைக்கிறது.
* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் மட்டும் 33,000 சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிறப்பு உலகில் எந்த ஆலயத்திற்கும் கிடையாது.
* திருவையாறு தலத்தில் முருகப் பெருமான் வில்லும் அம்பும் ஏந்திக் காட்சியளிக்கிறார்.