குருவாயூரில் பாகவத நாம சங்கீர்த்தன மேளா!
கலியுகத்தில் நற்கதி அடைய நாம சங்கீர்த்தனமே சுலபமான சாதனம் என்பதனை அறிந்து அந்த மார்க்கத்தை நானிலத்தில் வாழும் மக்கள் கடைப்பிடித்து வாழ பேருதவியாக பல பாகவதப் பெரியோர்கள் தோன்றினர்.
கலியுகத்தில் நற்கதி அடைய நாம சங்கீர்த்தனமே சுலபமான சாதனம் என்பதனை அறிந்து அந்த மார்க்கத்தை நானிலத்தில் வாழும் மக்கள் கடைப்பிடித்து வாழ பேருதவியாக பல பாகவதப் பெரியோர்கள் தோன்றினர். பாரத தேசம் முழுவதும் நாமப் பிரசாரம் செய்து அதன் பெருமையை உணரச் செய்தனர்.
அவ்வகையில் சென்னையில் உள்ள பகவந்நாம பிரச்சார மண்டலி டிரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 9 வருடங்களாக கடலூர், நெய்வேலி, திருப்பதி, உடுப்பி, திருவிசலூர், பூரி, கோவிந்தபுரம், பத்ராசலம், மதுரா போன்ற இடங்களில் பல பாகவத உத்தமர்களை அழைத்துச் சென்று பாகவத நாம சங்கீர்த்தன மேளாவை நடத்தியுள்ளார்கள். 10வது மேளா கேரளாவில் ஸ்ரீகுருவாயூரப்பன் சந்நிதியில் நடைபெறுகிறது. இதற்காக குருவாயூரில் கிழக்கு நடைவீதியில் உள்ள ருக்மணி ரீஜன்சி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த வைபவம் மே 16 தொடங்கி 19 வரை நடைபெறுகிறது. அவ்வயமம் நாடெங்கிலும் உள்ள பாகவத பெருமக்கள் கலந்துகொண்டு காலை உஞ்சவ்ருத்தியில் தொடங்கி பகல் முழுவதும் நாம சங்கீர்த்தன கீர்த்தனைகளைப் பாடி இரவு திவ்ய நாம சங்கீர்த்தனம், டோலோத்ஸவத்துடன் முடிப்பார்கள். இந்த மேளா மே 19ஆம் தேதி ஸ்ரீகிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண மகோத்ஸவத்துடன் நடைபெற்று நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த மேளாவை பாகவதர்களிடையே வாழ்ந்து மறைந்த பெரியோர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள்.
அவ்வகையில் இந்த10 வது மேளாவை காலஞ்சென்ற கில்லூர் ரங்கண்ணா பாகவதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
தகவலுக்கு 94440 10105/94440 11116.