முகப்பு
வெள்ளிமணி

அதிசய ஆலயங்கள்

அதிசய ஆலயங்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

• திருப்பூர் - காங்கேயம்

சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது முத்தனம்பாளையம். இங்கு அங்காளம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும், தமிழ் புத்தாண்டு தினத்தில் மட்டும் அம்மனின் முகத்தில் சூரிய உதயத்தின் போது ஒளி படும்.

• கேரளாவிலுள்ள சக்குளத்தம்மன் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பக்தர்களுக்கு மூலிகை மருந்து கசாயம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இது பலவித நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டது.

• சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியில் உள்ள சுட்டவிநாயகர் கோயிலில், தீப்பெட்டி செய்பவர்கள் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்து எரிந்த தீக்குச்சியை வீட்டில் சேமித்து வைக்கிறார்கள். காரணம் விபத்து நேராமல் இந்த விநாயகர் காப்பார் என்பது நம்பிக்கை.

கடலூர் மாவட்டம், மானம்பட்டியில் உள்ள முருகன்

கோயிலில் சுவாமிக்குப் படைத்த மிளகு பிரசாதமாக வழங்கப்படுகிறது. வாய் பேசாதோர், பேச்சுத் திறன் குன்றியோர் இதைப் பொடித்து நீர் அல்லது பாலில் கலந்து அருந்துகிறார்கள்.

• பூம்புகாரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருக்காய்க்காடு கிராமத்தில் தேவாரம் போற்றும் முருகன் கோயில் உள்ளது. இங்கு வேலுடன் வில்லும் ஏந்தி காட்சியளிக்கிறார் வேலவன்.

• கோவை மாவட்டம், தேவம்பாடி வலசு கோவில் கருவறையில் சிவபெருமான், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். அருகில் பார்வதி தேவியும், கங்காதேவியும் காட்சியளிக்கின்றனர். இரு தேவியருடன் சிவபெருமான் காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.