"மோர்' கொடுத்து பாடல் வாங்கிய தலம்
அரசன் அரண்மனையில் பசுவாக வளர்ந்து, வில்வ வனத்தில் புற்றில் மறைந்திருந்த ஈசனுக்கு உமையம்மை பால் சுரந்த திருத்தலம் திருவடிசூலம் என அழைக்கப்படும் திருஇடைச்சுரம்.
அரசன் அரண்மனையில் பசுவாக வளர்ந்து, வில்வ வனத்தில் புற்றில் மறைந்திருந்த ஈசனுக்கு உமையம்மை பால் சுரந்த திருத்தலம் திருவடிசூலம் என அழைக்கப்படும் திருஇடைச்சுரம். இறைவன் ஞானபுரீஸ்வரர் என்றும், திருஇடைச்சுரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் கோவர்த்தனாம்பிகை மற்றும் இமயமடக் கொடியம்மை.
சிவபெருமான் இடையராகத் தோன்றி, திருஞான சம்பந்தருக்கு மோர் கொடுத்து தன்னை காட்டியருளி, திருமுறை கேட்ட சிவத்தலமும் இதுவே. தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற 27வது தலம் இது.
தேன் அபிஷேகம் செய்யும் போது சிவன் மேனி பச்சையாக காட்சி தரும் அற்புதத்தையும் அழகையும் ஞானசம்பந்தர் வியந்து பாடியுள்ளார். இத்தலத்தின் தல விருட்சம் வில்வம்.
Advertisement
சனற்குமாரர், கௌதம ரிஷி ஆகியோர் தவமிருந்து ஈசனை தரிசித்த தலம் இது. சிவன் கருவறை அகழி அமைப்பில் விளங்குவதால் பிராகாரம் எப்போதும் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது. பசும்பால், தேன் அபிஷேகம் செய்து இத்தலத்தின் திருமுறை ஓதி ஞானபுரீஸ்வரரை வழிபட்டால் நினைத்தது கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
பிரதோஷம், சித்ராபௌர்ணமி, பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
அமைவிடம்: திருப்போரூர் - செங்கற்பட்டு நெடுஞ்சாலையில் ஆலய வரவேற்பு வாயிலைக் கடந்து 1 கி.மீ. சென்றால் ஆலயத்தை அடையலாம்.
தகவலுக்கு: 94444 89077