அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு
சினிமா மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் விமர்சனங்கள் இருக்கும் என சிம்பு கருத்து...
முன்பு எப்போதும் இல்லாதவகையில், மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து வருவதாகவும், நல்ல முடிவை மக்கள் எடுப்பார்கள் என்றும் நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெய்யிலையும் பொருட்படுத்தாது வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சிலம்பரசன் தியாகராய நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
''இந்த ஆண்டு வித்தியாசமான தேர்தல். அனைவருமே வாக்களிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகின்றன.
ஒரு கட்சிக்கு சார்பு எடுத்து என்னால் கருத்து கூற முடியாது. அனைத்துக் கட்சியிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த முறை வாக்களித்தே தீர வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் உள்ளது.
மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். எந்தத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் விமர்சனங்கள் இருக்கும். விமர்சனங்களை சந்தித்துதான் ஆக வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
TN Election 2026 live update Actor silambarasan cast vote in Tnagar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.