இன்னொருவரின் உரையிலிருந்து காப்பியடித்து பேசிய நடிகர் தனுஷ்?
நடிகர் தனுஷ் பேசியது காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்....
நடிகர் தனுஷின் பேச்சு காப்பியடிக்கப்பட்டது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும், பல திரைப்பட இயக்குநர்கள் தனுஷுக்குக் கதை கூறி வருகின்றனர்.
அண்மையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நடிகர் தனுஷ், தன் மகன் லிங்கா குறித்து பேசும்போது, “முன்பு நானும் லிங்காவும் இணைந்து விடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த போது, நான் அதிக ஆட்டங்களில் வெல்வேன். இரண்டு முறை வென்றால், ஒருமுறை விட்டுக்கொடுப்பேன். அப்படியொரு நாள், இன்று முழுவதும் நாம்தான் வெல்ல வேண்டும் என ஆடி அனைத்து ஆட்டங்களையும் வென்று எழுந்தேன்.
Advertisement
Advertisement
அப்போது, லிங்கா என்னைப் பார்த்து உட்காருங்கள் விளையாடுவோம் என்றான். நான் எதற்காக? எனக் கேட்டதும் நான் வெல்ல வேண்டாமா? எனக் கூறினான். அப்போதுதான் ஒன்று புரிந்தது; என்ன நடந்தாலும், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், எத்தனை தொந்தரவுகள் வந்தாலும் ஜெய்ப்பது வரை போராடிப் பார்க்க வேண்டும்.” என்றார்.
தனுஷின் இப்பேச்சு பல ஆண்டுகளுக்கு முன் உத்வேகம் அளிக்கும் பேச்சில் ஒருவர் பேசியது என ரசிகர்கள் அந்த பழைய விடியோவை பகிர்ந்துள்ளனர். தனுஷ் என்ன சொன்னாரோ, அதை அந்த நபர் அப்போதே சொல்லிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால், தனுஷின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதால், தனுஷ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
Many are posting that actor Dhanush's speech was plagiarized.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.