மூச்சு வாங்குதா மாமா? ஆச்சரியப்படுத்தும் நடிகர் சிவாஜியின் வெளிவராத விடியோ!
நடிகர் சிவாஜி கணேசனின் பழைய விடியோ சமூக வலைதளங்களில் வைரல்...
மறைந்த நடிகர் சிவாஜியின் தெருக்கூத்து நடிப்பு விடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா இதுவரை கண்ட நடிகர்களில் அசாதாரண நடிப்புத் திறன் கொண்டவர் சிவாஜி கணேசன். இன்றுவரை நடிப்பு என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிதான் என ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறார். இந்திய அரசிடமிருந்து தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
பராசக்தி திரைப்படத்தின் மூலம் வலுவான நாயகனாக அறிமுகமாகி 300 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் கடந்த 2001 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சிவாஜி மறைந்து 25 ஆண்டுகள் ஆனபோதும் அவருடைய நடிப்பின் தாக்கம் இன்னும் மறையவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிவாஜியின் மூத்த மகனான நடிகர் ராம்குமார் அவரின் யூடியூப் பக்கத்தில், “1987 ஆம் ஆண்டு மருமகனைச் சந்திக்க அமெரிக்கா சென்றபோது, நடிகர் திலகம் தன் மனைவி கமலா அம்மாவின் விருப்பத்திற்கு இணங்க அரிதான தெருக்கூத்து பாடலை நிகழ்த்தினார்.” எனக் குறிப்பிட்டு பழைய விடியோவை பகிர்ந்துள்ளார்.
இதுவரை வெளியாகாத இந்த விடியோவில் சிவாஜி மூச்சுவிடாமல் தெருக்கூத்து பாடலை 2 நிமிடங்கள் வரை தாளமிட்டபடி பாடுகிறார். பாடி முடித்ததும் அவரது மனைவி கமலா, “மூச்சு வாங்குதா மாமா?” வாஞ்சையுடன் அவரைக் கொஞ்சுவது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியையும் சிவாஜிக்கு இப்படியொரு நினைவாற்றலா என்கிற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
A video of the late actor Sivaji performing Therukoothu has surfaced, surprising fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.