FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உங்கள் அன்பை ஒருபோதும்..! - திரைத்துறையில் 18 ஆண்டுகள் நிறைவு செய்தார் நானி!

நடிகர் நானி திரைத்துறையில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது குறித்து...

5 செப்டம்பர் 2026, 2:51 pm IST
நடிகர் நானி - கோப்புப் படம்
பகிர்:

தெலுங்கு நடிகர் நானி திரைத்துறையில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி கடந்த 2008 ஆண்டு இயக்குநர் மோகன கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான “அஷ்டா சம்மா” எனும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் வெளியான “வெப்பம்” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

Advertisement

Advertisement

பின்னர், 2012 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமௌலியின் “நான் ஈ” படத்தில் நடித்ததன் மூலம் மொழிகளைக் கடந்து ரசிகர்கள் இவருக்கு ஏராளம். தனது இயல்பான நடிப்பால் நடிகர் நானி “நேச்சுரல் ஸ்டார்” என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் முன்னணி வகித்து வரும் நானி திரைத்துறையில் அறிமுகமாகி இன்றுடன் (செப். 5) 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளர்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்.

“உங்கள் அன்பை ஒருபோது நான் சாதாரனமாக எடுத்துக்கொண்டதில்லை. இனியும் எடுத்துக்கொள்ள மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, நடிகர் நானி நாயகனாக நடித்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் “தி பாரடைஸ்” எனும் படம் மிகப் பெரிய பொருள் செலவில் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம் வரும் செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Telugu actor Nani has completed 18 years since his debut in the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments