உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் 51 ஆண்டுகால சினிமா பயணம், கடந்த 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் வழியாக, இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலமாக தொடங்கியது.
தொடக்க காலத்தில் குணச்சித்திர நடிகராக தோன்றி, வில்லனாக உருமாறி, பைரவி திரைப்படத்தின் மூலம் நாயகனாக முன்னேறினார்.நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு தர்மன் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர்.நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிக்கின்றனர். முள்ளும் மலரும், புதுக்கவிதை, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரஜினிகாந்தின் நடிப்புக்காகவும், பாயும் புலி, அண்ணாமலை, பாட்ஷா ஆகிய படங்கள் அவரை ஆக்ஷன் ஹீரோவாக காண்பித்த நிலையில் திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.