மம்மூட்டி சொன்ன டயட் ரகசியத்தை வெளியிட்டார் நடிகர் சூர்யா!
மம்மூட்டி சொன்ன டயட் ரகசியம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட தகவல்..
நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவுடன் இணைந்து அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர்களது தோற்றம்தான்.
51 வயதான சூர்யா, தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் எடுத்துப் புகைப்படத்தில் இருவரின் தோற்றத்தைப் பார்க்கும் எவரும் அவர்களது வயதைக் கண்டுபிடிக்கவே முடியாது. அது முதலே கட்டுக்கோப்பான உடலின் ரகசியத்தைக் கேட்டு சூர்யாவை அவரது ரசிகர்கள் தொல்லை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அளவான உணவு, சரியான உறக்கம் போன்றவற்றுடன் உடல் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சொன்ன சூர்யா, நடிகர் மம்மூட்டியிடமிருந்து பெற்ற எளிய உணவு மற்றும் ஆரோக்கிய ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
உணவு முறை குறித்து நடிகர் மும்மூட்டி அளித்த ரகசிய குறிப்பை இத்தனை நாள்களும் பின்பற்றி வந்துள்ள சூர்யா, தற்போது ரசிகர்களுக்காக அதனைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது, நடிகர் மம்மூட்டி சொன்ன அறிவுரை மிகவும் எளிதானது. ஒருவர் விரும்பும் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவற்றை உட்கொள்ளும் அளவு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
போதுமான அளவு தூங்குவதும் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம் என மம்மூட்டி வலியுறுத்தியிருக்கிறார். அதாவது எட்டு முதல் ஒன்பது மணி நேரம் நிம்மதியாக தூங்குவது என்பதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள வேண்டாம் என்று சூர்யாவுக்கு அவர் அறிவுறுத்தியதோடு, வாழ்முறையில் மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழ்வதைக்காட்டிலும் எதையும் அளவோடு சரியாக செய்வதே சிறந்த அணுகுமுறை என்றும் குறிப்பிட்டாராம். பலருக்கும் இது பொருந்துவதாக உள்ளது.
அதாவது, சில உணவுகளை முற்றிலும் வேண்டாம் என்று முத்திரை குத்துவதற்குப் பதிலாக, உடலுக்குத் தேவையான அளவைத் தாண்டிச் செல்லாமல், பசிக்கு ஏற்ப உண்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் மம்மூட்டி அளித்த அறிவுரை.
இதனுடன், சூர்யா தற்போது தன்னுடைய உடல் நலம் குறித்த பார்வை மாறியிருப்பது குறித்தும் மிக யதார்த்தமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது தன்னுடைய இருபதாவது வயதுகளில் உடற்தகுதி என்பது தனக்கு என்னவாக இருந்தது என்பதற்கும், இப்போது அது என்னவாக இருக்கிறது என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
முன்பெல்லாம், வெளிப்படையாகத் தெரியும் தசைகள் மற்றும் அழகான உடலமைப்புக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். இன்று அப்படியில்லை, எனது உடலின் சீரான இயக்கம், செயல்பாடு, ஆரோக்கியத்தில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். இதை அடிப்படையாக வைத்து என்னுடைய உடற்பயிற்சிகளும் மாறிவிட்டன.
வெறும் வெளித்தோற்றத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னுடைய உடலின் சீரான இயக்கமும் அதன் வலிமையைப் பராமரிப்பதுமே என்னுடைய நோக்கமாக மாறிவிட்டது என்கிறார் நடிகர் சூர்யா.
Actor Suriya revealed the diet secret shared by Mammootty!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.