தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா என்பது பற்றி முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்..
தனுஷ் அரசியலுக்கு வந்தால், 2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய் - தனுஷ் இடையே போட்டி நிலவும் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி கடந்த ஒரு சில நாள்களாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்கனவே, முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெளியிட்ட கணிப்பு விடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்றால், தன் பிறந்த நாளை ஜூலை 28-ஆம் தேதி கொண்டாடிய நடிகர் தனுஷ், அதனை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Advertisement
Advertisement
வழக்கம்போல நன்றி, வணக்கம் மட்டும் சொல்லாமல், சில ரகசிய குறிப்புகளையும் தன்னுடைய ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார். “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்” என தனுஷ் கூறியிருந்தார்.
தன் ரசிகர் மன்றத்திற்கு நோக்கம் இருப்பதாகத் தனுஷ் கூறியிருப்பது ஏன், அது என்ன நோக்கம்? அவர் அரசியலில் நுழைவாரா? அதற்கான அச்சாரமாகத்தான் இவ்வாறு பேசியிருக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கியிருந்தன.
இது ஒருபுறமிருக்க, தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்பது பற்றி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெளியிட்ட கணிப்பு விடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் என்ன சொல்கிறார் என்றால், அடுத்த 2031-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - அதிமுக சேர்ந்து வந்து எங்களை எதிர்பார்கள் என்று கணித்திருந்தேன். ஒருவேளை, அடுத்த தேர்தலில் விஜய் சாரை ஜெயிக்கணும்னா, திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க வேண்டும். இது வெறும் திமுகவும் அதிமுகவும் மட்டும் களத்தில் இருந்தால்.
இப்போது சொல்கிறேன், என்னைப் பொருத்தவரை தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டால் திமுக, அதிமுகவே இருக்காது. இரண்டாவது இடத்துக்கு தனுஷ் வந்துவிடுவார்.
ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் - தனுஷ் என்று போட்டி மாறும் நிலையும் ஏற்படும். அதனை தனுஷ் சார்தான் முடிவெடுக்ணும். அவரது ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறதா என்று சொன்னால், நான் தனிப்பட்ட முறையில் அவரது ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவரது ஜாதகம் பற்றி எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த விடியோவில் இதுமட்டுமே இடம்பெற்றுள்ளது. ஒரு வேளை தனுஷ் போட்டியிட்டால் அடுத்த முதல்வராவாரா? அரசியலுக்கு நிச்சயம் வருவாரா? என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்?
நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
மேலும், பல திரைப்பட இயக்குநர்கள் தனுஷுக்குக் கதை கூறி வருகின்றனர். எனவே தற்போதைக்கு அவர் திரைத்துறையில் மிகவும் பிசியாக இருக்கிறார். ஆனால், ஒரு பக்கம் அவரது கவனம் அரசியலிலும் இருக்கலாம் என்பதே அவரது ரசிகர்களின் கருத்து.
If Dhanush enters politics.. what does Chief Minister Vijay's astrologer Ricky Radhan say?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.