FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?

முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ இல்லமாக பாமணி இல்லத்தை மாற்றவிருப்பதாகத் தகவல் குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ இல்லமாக பாமணி இல்லத்தை மாற்றவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய், அலுவலகப் பணிகளுக்காக தலைமைச் செயலகத்துக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்று வருகிறார். நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் இடையிலான சாலைகளில் முதல்வர் விஜய்யின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், மக்களும் அவதிக்குள்ளாவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பாமணி இல்லத்துக்கு முதல்வர் விஜய் அதிகாரபூர்வமாக குடியேறுவதுடன், முகாம் அலுவலகமாகவும் மாற்றவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகளைப் பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், பாமணி இல்லத்தை முதல்வர் விஜய் நேரில் பார்வையிடுவதுடன், இல்லத்தின் பெயரை வெற்றி வீடு என அதிகாரபூர்வமாக மாற்றத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

summary

Bamani House will be converted into CM Vijay's official residence: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments