ஆதிசங்கரர் அவதாரத் திருநாள்
கலியுகத்தில் ஒருசமயம் வேதங்கள் போதிக்கும் சனாதன தர்மத்திற்கு எதிரான மதங்கள் தோன்றி, அவற்றின் பிரசாரத்தினால் மக்கள்
கலியுகத்தில் ஒருசமயம் வேதங்கள் போதிக்கும் சனாதன தர்மத்திற்கு எதிரான மதங்கள் தோன்றி, அவற்றின் பிரசாரத்தினால் மக்கள் மயங்கிக் குழப்பமடைந்தபோது சரியான வழிபாட்டு முறைகள் கைவிடப்பட்டன. வேத, உபநிடதங்கள் போதித்த உண்மைகளும் விளங்காமல் போயின. இறைவனின் அருளால் அருளாளர் ஆதிசங்கரர் தோன்றினார்!
அத்வைத சித்தாந்த கொள்கைகளைப் போதித்தார். அவர் இப்பூவுலகில் வாசம் செய்தது 32 வருடங்கள்தாம்; ஆனால், தன் வாழ்நாள்களுக்குள் இமயம் முதல் குமரிவரை இப்பாரத கண்டம் முழுமையும் சென்றவர் பகவத் பாதர். நாம் உய்வதற்கு பல கிரந்தங்கள் (நூல்கள்) இயற்றினார். பாரத தேசத்தில் முக்கிய குருபீடங்களையும் நிறுவியுள்ளார். ஆதிசங்கரர் உபத்யாயர், ஆசார்யர், குரு என்ற மூன்று நிலைகளிலும் சிறந்து விளங்கினார்.
உலகம் உய்விக்க வந்த அந்த உத்தமர் அவதரித்த நன்னாள் சங்கர ஜயந்தி என்ற பெயரில் அவரது அவதாரத்தலமான காலடியிலும் (கேரளா) பல முக்கியமான தலங்கள் மற்றும் குருபீடங்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
மே 4-ஆம் தேதி சங்கர ஜயந்தி!